Published on 16/08/2018 | Edited on 16/08/2018
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தது தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் பல்வேறு விசாரணைகளை நடத்தி வருகிறது. இந்த விசாரணையின் அடுத்தகட்டமாக ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவர்கள் கில்னானி, அஞ்சன் ரிடிக்கா, நிதிஷ் நாயக் ஆகிய மூன்று பேரும் ஆகஸ்ட் 23,24 நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்படுத்துள்ளது.
அதேபோல் ஆகஸ்ட் 20-ஆம் தேதி அப்போலோ மருத்துவர்கள் ரவிக்குமார், அருள்செல்வன் ஆகியோர் ஆஜராகவும், ஆகஸ்ட் 21 அப்போலோ மருத்துவர்கள் பாஸ்கர், செந்தில்குமார் ஆகியோரும், ஆகஸ்ட் 24-ஆம் தேதி மருத்துவமனையின் அதிகாரி சுப்பையாவும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.