Published on 09/06/2020 | Edited on 09/06/2020
![49.16 LAKHS SAMPLES TESTED TILL DATE ICMR](http://image.nakkheeran.in/cdn/farfuture/ALQL3GKCSTMRj9_l0uvdheSpl310bl0syWL7NABp0K8/1591681552/sites/default/files/inline-images/ICMR%2045698.jpg)
நாடு முழுவதும் இன்று (09/06/2020) காலை 09.00 மணிவரை 49,16,116 மாதிரிகள் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.
அதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,41,682 மாதிரிகள் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் ஐ.சி.எம்.ஆர். குறிப்பிட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி (08/06/2020) 6,07,952 மாதிரிகள் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் உள்பட பல்வேறு மாநில அரசுகளும் கரோனா பரிசோதனையை அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.