டிஎன்பிசி குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக பல்வேறு நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டிருக்கும் இடைத்தரகர் ஜெயக்குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரூபாய் 4 கோடிக்கு 23 அரசு பணிகளை விற்பனை செய்தது அம்பலமாகி உள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரிடம் 7 நாட்களாக நடத்தப்பட்ட விசாரணையில் 23 அரசுப் பணிகளை 4 கோடிக்கு விற்பனை செய்தது அம்பலமாகியுள்ளது. தேர்வர்களிடம் ஜெயக்குமார் பணம் பெற்றுக்கொண்டு இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், முறைகேட்டுக்கு உதவியவர்களுக்கு பணத்தை பங்கிட்டுக் கொடுத்ததாகவும் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
குரூப் 2ஏ மற்றும் குரூப் 4 தேர்வில் முறைகேடு சம்பந்தமாக முக்கிய குற்றவாளிகளாக சிபிசிஐடி போலீஸார் கைது செய்யப்பட்டு இருக்கக்கூடிய ஜெயக்குமாரை 7 நாட்கள் காவலில் வைத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல முறைகேட்டில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியாக கருதப்படும் ஓம்காந்தனையும் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இரண்டு பேரையும் ராமநாதபுரத்தில் உள்ள ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை இரண்டு மையங்களுக்கும் நேரில் அழைத்துச் சென்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினார்கள். அந்த முறைகேடு எப்படி நடந்தது என்பது தொடர்பாக இருவரும் நடித்து காட்டி இருக்கிறார்கள். அந்த காட்சிகளையும் அவர்கள் வீடியோ பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் 7 நாட்கள் காவலில் வைக்கப்பட்டிருந்த ஜெயக்குமாரிடம் நடத்தப்பட்ட பல்வேறு கட்ட விசாரணையில் 23 அரசு பணிகளை ரூபாய் 4 கோடி ரூபாய்க்கு விற்று இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.