அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சி ஆரம்பிக்கப்பட்டு முதல் முறையாக பொதுகூட்டத்திற்கு கட்சியின் துணைப்பொதுசெயலாளர் டிடிவி தினகரன் சிதம்பரத்திற்கு வெள்ளி இரவு 10 மணிக்கு மேல வந்தாரு. முதல் முறையாக வரும் தலைவரோட கவனத்தை ஈர்க்கும் வகையில கட்சியினர் நகர் முழுவதும் பேனரை வெச்சாங்க.
இளைஞரணியினருக்கு பேருந்து நிலைய ஆட்டோ ஸ்டேன்டில் பேனர் வைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் அவங்க நள்ளிரவில் அடியாட்களுடன் வந்து 5-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை அடித்து நொறுக்கிவிட்டு ஆட்டோ ஓட்டுனர் வீராசாமியை தாக்கி பலத்த காயத்தை ஏற்படுத்தி மருத்துவமனையில் படுக்கவச்சுட்டாங்க.
வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு நடைபெற்ற சம்பவத்திற்கு காலை 9 மணி வரை தாக்கியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஒரு கட்டத்தில் போலீசாரின் உதவியால் அமமுக கட்சியின் மாவட்ட செயலாளர் பாலமுருகன் மற்றும் கட்சியினர் சுமுகமாக முடித்துகொள்ளலாம் என்று ஆட்டோ ஓட்டுனர்களிடம் கெஞ்சாத குறையாக கேட்க அவர்கள் மறுத்துட்டாங்க.
தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிதம்பரம் தாலுக்காவில் உள்ள அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களும் வேலைநிறுத்ததில் ஈடுபட்டு சாலைமறியல் செய்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் ஆட்டோ ஓட்டுனர்களின் தொடர் போராட்டங்களுக்கு பிறகு சம்பந்தபட்டவர்களான சரவணன், வினோத்குமார், வெங்கடேஷ் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிந்து கைத்து செய்துள்ளனர்.
தினகரனோ மயிலாடுதுறையில் பொதுகூட்டத்தை முடித்துகொண்டு இரவு பத்துமணிக்கு மேல் சிதம்பரம் கூட்டத்திற்கு வந்தார். அவரை வரவேற்று பேசிய மாவட்ட செயலாளரோ 12 ஆயிரம் பேர் மாற்று கட்சியில் இருந்து விலகி அமமுக கட்சியில் இணைகிறார்கள். இவர்களை அண்ணன் டிடிவி துண்டு அனிவித்து வரவேற்பார் என்று அமர்ந்தார்.
அதன் பின் மைக்கை பிடித்த டிடிவி தினகரன், தேமுதிக, துரோகி கட்சி (அதிமுக), பாமக, விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகளில் இருந்து 13 ஆயிரம் விலகி நம்ம கட்சியில் இணைகிறார்கள் என்று கூறியதுடன், ஒவ்வொரு கட்சியிலும் இத்தனை இத்தனை பேர் வந்திருக்கிறார்கள் என்று வாயாலே 13 ஆயிரம் பேர் எண்ணிக்கையை ஈடுசெய்தார். இதில 10 பேருக்கு மட்டும் தான் துண்டு போட்டு இருப்பாரு... இதனிடையே டிடிவியின் பேச்சை கேட்க மாலை 5 மணியில் இருந்த காத்திருந்த கூட்டத்திற்கு அவர் சொன்ன ஒரே செய்தி, துரோக ஆட்சிக்கு முடிவு கட்டி அம்மா ஆட்சியை மலர செய்வோம் என முடித்து கொண்டு வேனுக்கு சென்றுவிட்டாரு. இதகேட்கவா இவ்வளவு நேரம் காத்திருந்தோம்... என பல பேரு தலையில் அடித்துகொண்டே போகையில...
காவல்துறையை சேர்ந்தவர்களோ மேடைக்கு அருகே பேசிகொண்டபோது, அந்த இடத்தல 2 ஆயிரத்து 500 சேர் தான் போட்டு இருந்தாங்க, மிஞ்சி போன 500 பேர் நிற்க முடியும் அந்த இடத்தோட கெப்பாசிட்டியே மொத்தம் 4 ஆயிரம் பேர் தான் இருக்க முடியும். ஆனா இவங்க மாறிமாறி 12 ஆயிரம் 13 ஆயிரம் என வாயால வடை சுடராங்கலே இந்த 13 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் என்ன மேலோகத்திலா உட்காந்து இருக்கிறாங்க என காமன்ட் அடித்து சிரித்துகொண்டே அவங்களும் கூட்டம் முடிந்து நகர்ந்தாங்க.