ஜல்லிக்கட்டு விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவதாக ஏதேதோ ஒழுங்குமுறைகளை புகுத்தினார்கள். ஆனால் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு புதிய முறைேகேடுகள் தூள் கிளப்புகின்றன.
காளைகள் பதிவதிலேயே முறைேகேடுகள் நடப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு காளைகள் பதிவதற்கு 5 ஆயிரம் ரூபாய்க்கு டி.டி., உரிமையாளருடன் காளையின் புகைப்படம், கால்நடை மருத்துவரின் சான்று ஆகியவற்றுடன் ஜல்லிக்கட்டு கமிட்டியிடம் டோக்கன் பெறேவேண்டும்.
ஆனால், 700 காளைகள் பதியப் போவதாக சொல்லிவிட்டு 300 காளைகள் மட்டுமே பதிவு செய்யப்படுவதாக கூறுகிறார்கள். பதிவு முடிவு பெற்றதாக சொன்னாலும் பிளாக்கில் டோக்கன்கள் விற்கப்படுவதாக குற்றம்சாட்டுகிறார்கள். ஒரு காளைக்கு 5 ஆயிரம் முதல் அதற்கு மேலும் விற்கப்படுகிறதாம். வெகு தூரத்தில் இருந்து வரும் காளை உரிமையாளர்களிடம் இந்த டோக்கன்களுக்கு ஏக கிராக்கி. விற்பவர்களில் போலீசாரும் உள்ளனராம்.