Skip to main content

அமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கை குறிப்பு!!! இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை... என்ன நடந்தது புல்வாமா தாக்குதலில்...

Published on 16/02/2019 | Edited on 16/02/2019

 

pulwama attack


 

ஜம்மு, சன்னை ராம ட்ரான்சிஸ்ட் கேம்ப்பிலிருந்து (channi rama transit camp) 78 பேருந்துகளில், சுமார் 2500 ஜவான்கள் ஸ்ரீநகர், பக்‌ஷி ஸ்டேடியம் ட்ரான்சிஸ்ட் கேம்பிற்கு (bakshi stadium transit camp) செல்வதுதான் பயணத்தின் நோக்கம். பிப்ரவரி 14 காலை 3.30 மணிக்கு தொடங்கியது இந்த பயணம்... ஒரே நேரத்தில் எப்படி இத்தனை வீரர்களை அனுப்பினார்கள் என்ற கேள்வி எழலாம். முந்தைய நாட்களிலேயே  ஒவ்வொரு பிரிவாக பயணத்தை தொடங்கியிருக்க வேண்டும். அந்த பகுதிகளில் பாதுகாப்பு உறுதிசெய்யப்படாததால் முன்னர் கிளம்ப வேண்டிய பிரிவுகளும் அப்படியே தங்கின. பின்னர் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்ட பின்பு அனைவரும் புறப்பட்டுள்ளனர்.



கிட்டதட்ட இலக்கை நெருங்கிவிட்டனர், இன்னும் 30 கிலோமீட்டர்களே இருந்தநிலையில், காக்காபோரா, லேல்கர் இணைப்பு சாலையிலிருந்து ஒரு எஸ்.யு.வி. வாகனம், சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் வந்துகொண்டிருந்த சாலைக்கு அருகிலுள்ள சாலையில் வந்தது... சி.ஆர்.பி.எஃப். படை வாகனங்களுக்கு என ஒரு பாதையும், பொதுமக்கள் செல்வதற்கென ஒரு பாதையும் தனித்தனியாக இருந்தது. இரண்டிற்கும்  இடையில் செண்டர் மீடியன் (centre median) எனப்படும் இடைவெளி மட்டுமே இருந்தது. மாலை 3.30 மணிக்கு திடீரென அந்த எஸ்.யு.வி. வாகனம் அந்த செண்டர் மீடியனை தாண்டி, ராணுவ வீரர்கள் வந்த 5வது பேருந்தின் இடப்பக்கத்தில் இடித்தது. அப்போது காருக்குள் அதற்குள் இருந்த வெடிபொருட்கள் வெடித்தன. இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 45 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அந்த வாகனத்தில் கிட்டதட்ட 150 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிபொருள் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என முதல்கட்ட தகவல் தெரிவிக்கிறது. 

 

pulwama attack


இந்த தற்கொலை தாக்குதல் நடத்திய அகமது தார் என்பவனின் உடல் 80 மீட்டர் தூரத்தில் காணப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷி முஹமத் இயக்கம் பொறுப்பேற்றுக்கொண்டது. இந்த தாக்குதல் குறித்து பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் உள்ளன. ஆனால் ஒருவரின் கூற்று இங்கு முக்கியமாக பார்க்கப்பட வேண்டியுள்ளது. அவர்தான் சி.ஆர்.பி.எஃப் செய்தித் தொடர்பாளர் ஆஷிஸ் குமார் ஜா. அவர் இந்தியா டுடே க்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறுகிறார். 
 

வீரர்கள் வந்த பேருந்து மிக வேகமாக தங்களது இலக்கை அடைந்து கொண்டிருந்தது. ஏறக்குறைய ஒரு வாரம் ஜம்மு-ஸ்ரீநகருக்கு இடையேயான நெடுஞ்சாலையில் போக்குவரத்து முதலான அனைத்து நடமாட்டங்களும் கண்காணிக்கப்பட்டது. இவைகளுக்கு பின்னரே, நேற்று வீரர்கள் தங்களது பயணத்தைத் தொடங்கினர். வீரர்கள் பயணிக்க அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாகச் செய்யப்பட்டது. அந்த நெடுஞ்சாலையில் இப்படியொரு தாக்குதல் நடக்க வாய்ப்பே கிடையாது. இந்தப் பகுதியில் நிறைய சோதனைச் சாவடிகள் உள்ளன. அவை அத்தனையையும் தாண்டி நூற்றுக்கணக்கான கிலோ அளவுள்ள வெடிப்பொருள்களைக் எடுத்துவர முடியாது. பாதுகாப்புப் பணிகளில் ஏதோ தவறு நடந்துள்ளது. இல்லையென்றால், இதுபோன்ற சம்பவம் நடந்திருக்காது. இது தொடர்பாக நிச்சயம் விசாரணை நடத்தப்படும்’


 

pulwama attack




தீவிரவாதிகள் எந்தநேரத்திலும் வெடிகுண்டு தாக்குதல் நடத்த வாய்ப்பிருக்கிறது என ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் எங்களுக்குக் கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், எந்த இடத்தில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதை குறிப்பிட்டுக் கூறவில்லை". என மூத்த அதிகாரி ஒருவர் தி இந்துவிற்கு (ஆங்கிலம்)
பேட்டியளித்துள்ளார். 


மேலும், கடந்த 13 ஆம் தேதி அமெரிக்கா தனது நாட்டு மக்களுக்கு வெளியிட்ட பயண எச்சரிக்கை குறிப்பில், காஷ்மீர் பகுதிக்கு செல்லாதீர்கள், அங்கு ஆயுத சண்டைக்கான வாய்ப்பிருக்கிறது என கூறியுள்ளது. யாரோ சிலரின் கவனக்குறைவு, விலைமதிப்பற்ற உயிர்களை விலையாக பெற்றுள்ளது... 

 

 

 

Next Story

காஷ்மீரில் முழங்கிய பிரதமர்; சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் முதல் பயணம் 

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
 Prime Minister in Kashmir and First trip after cancellation of special status

கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கி வந்த சிறப்பு சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பாணையை வெளியிட்டது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து, ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் செயல்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் ஆதரவு கொடுக்கப்பட்டாலும் எதிர்ப்பும் கிளம்பியது. 

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் பலமுறை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் மனுவாகத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. தற்போது வழக்கின் அனைத்து வாதங்களும் முடிந்து 5 பேர் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழக்கின் தீர்ப்பை கடந்த டிசம்பர் 11ஆம் தேதி வழங்கியது.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யா காண்ட் ஆகிய மூவரும் ஒரே மாதிரியான தீர்ப்பு வழங்கினர். இதையடுத்து நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் 3 நீதிபதிகளின் தீர்ப்பில் இருந்து மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். அதற்கடுத்ததாக நீதிபதி சஞ்சிவ் கன்னா இந்த இருவிதமான தீர்ப்புகளை ஏற்பதாக ஒரு தீர்ப்பை வழங்கினார். சட்டப்பிரிவு 370 செல்லும் என்று மூன்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளதாலும், ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பளித்துள்ளதாலும், மற்றொரு நீதிபதி இரண்டு தீர்ப்புகளுக்கு உடன்படுவதாகவும் கூறியுள்ள நிலையில், 3:2 என்ற அடிப்படையில் சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.  ஜம்மு - காஷ்மீர் வழங்கி வந்த சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். 

இந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டில் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு, பிரதமர் மோடி முதல் முறையாக காஷ்மீர் சென்றார். விமானம் மூலம் காஷ்மீரின், ஸ்ரீநகர் பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்து ராணுவத்தின் சின்னர் கிராப்ஸ் படைதளத்தில் அமைக்கப்பட்டுள்ள போர் நினைவிடத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். 

அதன் பின்னர், ஸ்ரீநகர் பஷி மைதானத்திற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஜம்மு - காஷ்மீரில் ரூ.6,400 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன் பிறகு அங்கு பேசிய பிரதமர் மோடி, “நாட்டின் கிரீடமாக ஜம்மு காஷ்மீர் திகழ்கிறது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததன் மூலம் ஜம்மு - காஷ்மீரில் ஒரு தலைமுறைக்கான காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்த புதிய காஷ்மீருக்காக பல ஆண்டுகளாக காத்திருந்தோம். காஷ்மீர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே மோடியின் கியாரண்டி ஆகும். மக்கள், ஜம்மு - காஷ்மீர் வந்து தங்கள் திருமணங்களை நடத்த வேண்டும். இப்போது, உலகம் முழுவதும் உள்ள பெரிய பிரபலங்களும் ஜம்மு காஷ்மீருக்கு தைரியமாக வருகிறார்கள்” என்று கூறினார். 

Next Story

ஓட்டுநர் இல்லாமல் ஓடிய சரக்கு ரயில்!

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
A freight train ran without a driver

ஜம்மு - காஷ்மீரில் உள்ள கதுவா ரயில் நிலையத்தில் ரயில் ஓட்டுநர்களின் பணி மாற்றத்திற்காக சரக்கு ரயில் ஒன்று நிறுத்தப்பட்டது. அப்போது ரயிலை எஞ்சினை இயக்கத்தில் வைத்துவிட்டு ஓட்டுநர்கள் ரயிலை விட்டு இறங்கியுள்ளனர். இதனையடுத்து அந்த ரயில் திடீரென ஓட்டுநர் இல்லாமல் புறப்பட்டுள்ளது. அதிவேகமாக சென்ற ரயில் 5 ரயில் நிலையங்களைக் கடந்து சுமார் 70 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நோக்கி வேகமாக சென்றுள்ளது.

ஓட்டுநர் இல்லாமல் மணிக்கு 100 கிமீ வேகத்தில் செல்லும் சரக்கு ரயில் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் சரக்கு ரயில் எஞ்சினில் கை பிரேக்கை இழுக்க மறந்து ஓட்டுநர்கள் இறங்கிச் சென்றதாலும், தண்டவாளம் சரிவு காரணமாக ரயில் தானாகப் புறப்பட்டது தெரியவந்துள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று கோஷியார்பூரில் உள்ள உச்சி பாஸ்சி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் மரக்கட்டைகளை வைத்து ரயிலை நிறுத்தியுள்ளனர். அதே சமயம் லந்தர் - பதான்கோட் இடையே உள்ள ரயில் வழித்தடத்தில் உள்ள அனைத்து கிராசிங்குகளும் உடனடியாக மூடப்பட்டன. இதன் காரணமாக எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என ஜம்மு கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்தனர்.