அதிமுகவில் யார் அடுத்த முதல்வர் என்கிற சர்ச்சை நீடித்து வருகிறது. அமைச்சர்கள் தங்களுக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், முதல்வர் வேட்பாளர் யார் என்பது, உரிய நேரத்தில் கட்சி அறிவிக்கும் எனக்கூறி முற்றுபுள்ளி வைக்கப்பட்டது.
வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் அதேசமயம், 2021-ல் நிரந்தர முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தான் வருவார் என்பதை பறைசாற்றும் விதமாக தேனி மாவட்டம் முழுவதும் அதிமுக கட்சி தொண்டர்களும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆதரவை பெற்ற ஒரே அரசியல் வாரிசு ஓ.பன்னீர்செல்வம் தான் என்றும், அவர்தான் தமிழகத்தின் நிரந்தர முதல்வர் என்றும் போஸ்டர்களில் அச்சிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தேனி பெரியகுளம் தென்கரையில் உள்ள ஓபிஎஸ் இல்லம் அருகே ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டுள்ளன.
துணை முதல்வர் ஓபிஎஸ் வீட்டில் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வரும் நிலையில், ஓபிஎஸ்சுன் உத்தரவின் பேரில் அந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டுள்ளது என அதிமுகவில் எதிரொலிக்கிறது.