சென்னை, ஐஸ் ஹவுசில் நடந்த தி.மு.கவின் பொதுக்கூட்டத்தில் பட்டிமன்ற நடுவர். திண்டுக்கல் ஐ.லியோனி, ரஜினி மற்றும் கமலின் அரசியல் வருகை குறித்து நகைச்சுவையாக பேசிய உரை.
இன்று மிகப்பெரிய நடிகர்கள் இருவர் அரசியலுக்கு வந்துவிட்டனர். இனிமேல் அவர்களால் சினிமாவில் தமன்னாவுடன் டூயட் பாடமுடியாது, ஏனென்றால் வயதாகிவிட்டது. அவர்களுடன் ஆடினால் மகளை இடுப்பில் தூக்கிவைத்துக்கொண்டு ஆடுவதுபோல் இருக்கும். அவர்கள் வேண்டுமானாலும் ஐம்பது வயது கதாபாத்திரங்களை ஏற்றுக்கொண்டு நடிக்கலாம். அவர்கள் நடித்த காலத்தில் நானும் ரசித்தவன்தான். கமலுக்கும் நான் ரசிகன், ரஜினிக்கும் நான் ரசிகன். அவர்கள் நடிப்பிற்கு உண்மையாகவே நான் ரசிகன். கமலஹாசனின் "பதினாறு வயதினிலே" சப்பாணி கதாபாத்திரம் "மயிலு, ஆத்தா கோழி வளர்த்தா, ஆடு வளர்த்தா ஆனா நாய் மட்டும் வளக்கல. அதுக்கு பதிலா என்ன வளர்த்தா" இந்த வசனம், ஆட்டுக்குட்டி முட்டையிட்டு அந்தப் பாட்டுல என்னா நட. அதேபடத்தில் வருவாரே நம்ம ஆளு "பரட்டை" கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பீடி குடிச்சுட்டு நல்லா வசனம் பேசுவார். அப்பொழுது எல்லாம் கைதட்டினோம். உலகநாயகன் ஆரம்பித்துள்ள கட்சியின் பெயர் மக்கள் நீதி மய்யம். அது மக்களுக்கான கட்சியாம், நாங்கள் எல்லாம் ஆடு,மாடு அவைகளுக்கா கட்சி வைத்துளோம்.
பத்திரிகையாளர்கள் கேட்கிறார்கள் உங்கள் கொள்கை என்ன என்று, அதற்கு அவர் மக்கள்தான் கொள்கையை சொல்லவேண்டும், கொள்கையை மக்களிடமிருந்துதான் உருவாக்க முடியும் அங்க எல்லாரும் முழிக்கிறானுங்க என்ன கொள்கை, இப்படி சொல்றாரேன்னு. இவ்வளவு நாள் அரசியலுக்கு ஏன் வரவில்லை என்ற கேள்விக்கு இவ்வளவு நாளாக உங்கள் உள்ளத்தில் இருந்தேன், இனி உங்கள் இல்லத்தில் இருப்பேன் என்கிறார், இரண்டும் ஒன்றுதானே. நல்லா அழகா பேசுறாரு, ஆனா செயல்ல எப்படி இருப்பாருனு தெரியல.
ஐ.ஐ.டியில் நடைபெற்ற விழாவில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ஐ.ஐ.டியின் இயக்குனர் இருக்கிறார். என்ன பாட்டு இசைகிறார்கள் 'மகா கணபதி, ஸ்ரீ மகா கணபதி' நான் எவ்வளவு அழகாக பாடுகிறேன் யாராவது கைத்தட்டுரிங்களா. நீங்கள் ஏன் கைத்தட்டவில்லை என்றால் உங்களுக்கு இந்த பாடல் புரியவில்லை. இதுபுரியாமல் நீங்கள் என்னாது என்று விழித்தீர்கள். ஆனால் இதேபாடலை சீர்காழி கோவிந்தராஜன் பாடியிருப்பார், "கணபதியே வருவாய், அருள்வாய்" என்று. இதை தமிழில் கேட்கும்பொழுது எவ்வளவு அழகா, சுகமா இருக்கிறது.
இங்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அனைத்து தமிழர்களும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இவர் என்னவென்றால் இமயமலையில் குதிரையில் சென்று கொண்டிருக்கிறார். இப்படி இருந்தால் கம்பெனியை எப்படி நம்புவது. நீங்களும் அந்த ஊர்தான என்னை வாழவைத்தது தமிழ்பால். என்று சொல்கிறார். கார்நாடகாவிடம் சென்று தண்ணீர்கொடு, காவிரி நீர் தரவில்லை என்றால் நான் படத்தில் நடிக்கமாட்டேன் என்று போராடவேண்டியதுதானே. அப்படி வந்து போராடினா மக்கள் நம்பி ஓட்டு போடுவாங்க. "வந்தேன்டா பால்காரன் பசு மாட்டை பற்றி பாடப்போறேன்" சொன்னவரு.
அந்த மாட்டுக்காக ஐந்து லட்சம் இளைஞர்கள் போராடினார்களே அதற்கு இதுவரை குரல் கொடுக்கவில்லையே ஏன். அப்பளம் விற்று பணக்காரன் ஆவதுபோல, முதலமைச்சர் ஆவது என்பது முடியாத காரியம். கமல்ஹாசன் கட்சியில் கள ஆய்வு நடத்த முடியுமா? முனியாண்டி விலாஸ்க்கு இருக்குற அளவுக்குகூட உங்களுக்கு கிளைகள் இல்லைபோல, இவர்கள் கூட பரவாயில்லை. இந்த பா.ஜ.கவில் ஒரு மூன்று நபர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மட்டும்தான் பேசுவார்கள். மத்திய இணைஅமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன், மாநில தலைவர் தமிழிசை சௌந்தராஜன். அந்த அம்மா சொல்கிறார் இன்ஜினியரிங் படித்தவர்கள் ஹிந்தி கற்றுக்கொண்டால் வடமாநிலங்களில் சென்று வேலைபார்க்கலாம் என்று. அப்புறம் ஏன் ஹிந்தி மட்டும் தெரிஞ்சவன் இங்கு பானிபூரி விற்கிறான்.