Skip to main content

மாவீரரின் கடைசி நிமிடங்கள்!

Published on 25/01/2019 | Edited on 25/01/2019
bagath singh

 

1931-ஆம் ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி மாலை ஐந்து மணி.....

 

தான் கேட்டுக்கொண்டதற்கிணங்க தனது வக்கீல் பிராணநாத் மேத்தா வாங்கிக்கொண்டு வந்த புத்தகத்தை அன்று பிற்பகல் மூன்று மணியளவில் பகத்சிங் படித்துக் கொண்டிருந்தார்.

 

விடிவதற்குள் படித்து முடித்துவிடவேண்டும் என்பது அவரது ஆசை. விடிந்து விட்டால் தனது வாழ்க்கை முடிந்து போய்விடும் என்பது அவருக்குத் தெரியும்.

 

இன்னும் புத்தகத்தில் மேலும் பல பக்கங்கள் இருக்கின்றன.

 

சிறைக்கொட்டடி கதவு திறந்தது. சிறை அதிகாரி அங்கே நின்று கொண்டிருந்தார்.

 

"சர்தார்ஜி! உங்களைத் தூக்கிலிடுவதற்கான உத்தரவு இதோ... தயவுசெய்து தயாராகுங்கள்''.

 

பகத்சிங் வலதுகையிலே அந்த லெனின் புத்தகம். அதிலிருந்து பார்வையை அகற்றாமலே பகத்சிங் சொன்னார். "ஒரு புரட்சியாளன் மற்றொரு புரட்சியாளனைச் சந்திக்கிறான்.''

 

மேலும் சில வரிகளைப் படித்துவிட்டு பகத்சிங் சொன்னார் :"சரி... நாம் போகலாம்.''

 

தூக்குமேடையை நோக்கி பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் அதிகாரிகளுடன் சென்றனர்.

 

"இன்குலாப்- ஜிந்தாபாத்' என்ற தங்கள் போர்க்கள முழக்கத்தை அவர்கள் முழங்கிக்கொண்டே சென்றனர்.

 

சிறைச்சாலையிலிருந்து இதர அனைத்து விதமான கைதிகளும் இந்த முழக்கத்துக்கு "இன்குலாப்- ஜிந்தாபாத்' என பதில் முழக்கம் செய்து தங்கள் அன்பிற்குரிய மூன்று தோழர்களுக்கு விடைகொடுத்தனர்.

 

பலிபீடத்தை நெருங்கியபோது அவர்களிடம் தங்கள் முகங்களை மூடிக்கொள்ள கறுப்புத் துணிகளை அதிகாரிகள் கொடுத்தனர்.

 

அந்த வீர இளைஞர்கள் அந்தக் கறுப்புத் துணியை தூக்கி வீசியெறிந்து விட்டு தூக்கு மேடையை நோக்கி, முன்னேறினர்.


முகம் தூக்கி நடைபிறழாமல் தூக்கு மேடை ஏறினர். தூக்குக் கயிற்றை முத்தமிட்டனர்.

 

"ஏகாதிபத்தியம் ஒழிக'' 

 

"இன்குலாப் - ஜிந்தாபாத்''

 

இவர்களது உரத்த குரலுக்கு சிறையிலிருந்த அனைத்து கைதிகளும் அங்கேயிருந்து பதில் குரல் கொடுத்தனர்.

 

"இன்குலாப்- ஜிந்தாபாத்''

 

தூக்குக் கயிற்றில் தொங்கியபோது அவர்கள் கண்கள் அக்னி புஷ்பங்களாகக் காட்சியளித்தன'' என்கிறார் அரந்தை நாராயணன்.

 

 

Next Story

பகத்சிங் பிறந்த நாள் விழா; விமர்சையாக கொண்டாடும் பொதுமக்கள்!

Published on 28/09/2021 | Edited on 28/09/2021

 

Bhagat Singh Birthday Celebration

 

சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஆங்கில ஆட்சிக்கு எதிராக சிம்ம சொப்பனமாக விளங்கிய இந்துஸ்தான் சோசலிச குடியரசு அமைப்பின் தலைவர்களில் ஒருவரான பகத்சிங் என அழைக்கப்பட்டவரின் 114 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1907 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இருபத்தி ஏழாம் நாள் பஞ்சாப் மாநிலத்தில் பங்கா என்ற கிராமத்தில் ஒரு சீக்கிய குடும்பத்தில் இரண்டாவது மகனாகப் பிறந்தவர் பகத்சிங்.

 

இவர் விடுதலைப் போராட்டத்திற்காக தன்னுடைய வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்தவர். இவர் அகிம்சை வழியில் சென்றால் சுதந்திரம் பெற முடியாது ஆயுதம் வாங்கினால் மட்டுமே சுதந்திரம் பெற முடியும் என்ற கொள்கையோடு இந்துஸ்தான் குடியரசு கழகம் எனும் அமைப்பில் இணைந்தார். மேலும் சென்ட்ரல் அசம்பலி ஆலையில் வெடி குண்டு வீசியது மற்றும் துண்டு பிரச்சாரம் இன்குலாப் சிந்தாபாத் என்று முழக்கமிட்டு தானே சரணடைந்தவர். பின்னர் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதிராய் என்பவரின் இறப்புக்குக் காரணமாயிருந்த காவல் அதிகாரியை சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

 

பகத்சிங் ஆங்கிலேய அரசின் 24வது அகவையில் 1931ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார். மாபெரும் சுதந்திர போராட்ட தியாகி என்று பலராலும் அழைக்கப்படும் பகத்சிங் 63 நாட்கள் சிறைவாசத்தில் இருந்தபோது இந்தியக் கைதிகளுக்கு சம உரிமை பெறுவதற்காக உண்ணாவிரதம் இருந்ததில் அவருக்கு மிகுந்த பங்குண்டு என்பதால் இவர் பெரும் அளவில் மக்களிடம் பிரபலமாகினார். இன்று இவரின் பிறந்தநாளை இந்தியா மற்றும் தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டாடி அவருடைய திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினர்.