Skip to main content

சூர்யா - பாலா படத்தில் இணைந்த சுதா கொங்கரா; எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Published on 19/03/2022 | Edited on 19/03/2022

 

Sudha Kongara Work Executive Director surya and bala film

 

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா இயக்குநர் பாலா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.  ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான பிதாமகன், நந்தா ஆகிய இரு படங்களும் பெரும் வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது முறையாக சூர்யா பாலா இணையும் இப்படத்தின் மீதான ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாத இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. 

 

இந்நிலையில் இப்படத்தில் இயக்குநர் சுதா கொங்கரா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சூர்யா - பாலா கூட்டணியில் உருவாகும் படத்தில் சுதா கொங்கரா தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்ற உள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே பாலா இயக்கத்தில் வெளியான 'பரதேசி' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி இருந்த நிலையில் தற்போது மீண்டும் பாலா படத்தில் பணியாற்றவுள்ளார். மேலும் இப்படம் மீனவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை பேசவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ்நாடு அரசுத் திரைப்பட விருது விழா - பரிசு பெற்ற திரைப் பிரபலங்கள்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024

 

தமிழ்நாடு அரசின் சார்பில் திரைப்பட விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ்ப் பேரவை டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெற்றது. இதில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் விழாவிற்குத் தலைமையேற்று விருது அறிவித்தவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கினார். மேலும் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விருது அறிவிக்கப்பட்ட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டு விருது, சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகையைப் பெற்றுக் கொண்டனர்.
 

Next Story

சூர்யாவுக்கு ஜோடியாகும் இளம் கதாநாயகி

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
aditi shankar to pair suriya in new film

சூர்யா தற்போது தனது 42வது படமான ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  3டி முறையில் சரித்திரப் படமாக 10 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. வருகிற ஏப்ரலில் இப்படம் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. 

ad

இப்படத்தை தனது 43வது படத்திற்காக சுதா கொங்கராவுடன் கூட்டணி வைத்துள்ளார். துல்கர் சல்மான், நஸ்ரியா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மா உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர். கடந்த அக்டோபர் மாதம் வெளியான அறிவிப்பு வீடியோவில், படத்தின் தலைப்பு மறைக்கப்பட்டு  'புறநானூறு' என்ற டேக் லைன் மட்டும் இடம் பெற்றிருந்தது. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ள நிலையில் அவருக்கு 100வது படமாக அமைந்துள்ளது. சமீபத்தில் இப்படத்திற்கான பாடல் ஒன்றை பாடகி தீ குரலில் பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாத இறுதியில் மதுரையில் உள்ள கல்லூரியில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

இப்படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளதாக கடந்த ஆண்டு மத்தியில் தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது இதே தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது. விரைவில் கதாநாயகி குறித்தான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.