Skip to main content

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியான கோபி - சுதாகர் பட அப்டேட்

Published on 11/02/2025 | Edited on 11/02/2025
gopi sudhagar movie titled as oh god beautiful

யூ-ட்யூபில் நகைச்சுவை வீடியோக்களில் நடித்து தங்களுக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர்கள் கோபி - சுதாகர். இவர்கள் வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்திருந்தாலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முதன்மை கதாபாத்திரத்தில் ஒரு படம் நடிப்பதாக இருந்தது. ‘ஹே மணி கம் டுடே, கோ டுமாரோ’ என்ற தலைப்பில் உருவாகுவதாக அறிவிக்கப்பட்ட இந்தப் படத்தை எஸ்ஏகே என்பவர் இயக்க ஜேக்ஸ் பிஜோய் இசையமைப்பதாக இருந்தது. இப்படத்திற்காக க்ரவுட் பண்டிங் முறையில் கோபி மற்றும் சுதாகர் இருவரும் நிதி திரட்டி 'பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தனர். ஆனால் அந்த படம் கொரோனாவிற்கு பிறகு ஆரம்பிக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அது குறித்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. 

இதனைத் தொடர்ந்து 2023 ஆண்டு இருவரும் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது. இப்படத்தை விஷ்ணு விஜயன் என்ற அறிமுக இயக்குநர் இயக்க சென்னை பிரசாத் லேப்பில் 2023 ஜனவரி 23ஆம் தேதி அன்று பூஜை நடந்தது. இதையடுத்து எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது டைட்டில் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. படத்திற்கு ‘ஓ காட் பியூட்டிஃபுல்’(Oh God Beautiful). டீசரில்  கோபி - சுதாகர் இடம் பெறவில்லை. கார்டூன் வடிவில் டீசர் அமைந்துள்ளது. இப்படம் விரைவில் வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

சார்ந்த செய்திகள்