Skip to main content

"எங்கள் குடும்பத்தின் பெயரை கெடுக்கப் பார்க்கிறார்கள்" - நடிகர் சாந்தனு பாக்யராஜ் குற்றச்சாட்டு

Published on 25/01/2022 | Edited on 25/01/2022

 

shanthanu bhagyaraj say someone misuse his family name

 

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் சாந்தனு அறிமுக இயக்குநர் ஸ்ரீஜர் இயக்கத்தில் 'முருங்கைக்காய் சிப்ஸ்' படத்தில் நடித்திருந்தார். ரொமான்டிக் கமர்சியல் படமாக வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. 

 

இந்நிலையில் நடிகர் சாந்தனு தனது குடும்பத்தின் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள் என குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "என் திரையுலக நண்பர்களுக்கு சமீபகாலமாக எங்கள் குடும்பத்தின் பெயரில் சில தவறான அழைப்புகள் வந்து கொண்டிருக்கிறது. அவர்கள் எங்கள் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள். கவனமாக இருங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது குறித்து உங்களுக்கு ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் எனவும் தெரிவித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அப்பாவின் கண்ணீரை இந்த படம் துடைச்சிருக்கு” - எமோஷனலான ஷாந்தனு

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
shanthanu speech in blte star success meet

'நீலம் புரொடக்‌ஷன்ஸ்' சார்பாக பா. ரஞ்சித் தயாரிப்பில் ஜெய்குமார் இயக்கத்தில் ஷாந்தனு, அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம்  'ப்ளூ ஸ்டார்'. கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவான இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். கடந்த 25 ஆம் தேதி வெளியான இப்படம் நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது. இப்படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்ற நிலையில், பா. ரஞ்சித், அஷோக் செல்வன், ஷாந்தனு, கீர்த்தி பாண்டியன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர்.

அதில் ஷாந்தனு பேசுகையில், “இந்த வெற்றிக்காக நான் 15 ஆண்டுகளாக காத்துக் கொண்டிருந்தேன். இன்னும் கூட என்னால் இதை நம்பமுடியவில்லை. இப்படி ஒரு நல்ல விஷயம் என் வாழ்வில் நடக்கிறதா..?, என் மனைவியிடம் கூட நேற்று என்னால் நம்பமுடியவில்லை என்று பேசிக் கொண்டிருந்தேன். சக்சஸ் மீட்டில் சந்திப்போம் என்று பலமுறை பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசி இருக்கிறோம். ஆனால் சக்சஸ் மீட் என்பது இதுதான் என் வாழ்வில் முதல்முறை. ப்ருத்வி பேசிய அனைத்தும் எனக்கும் பொருந்தும். இப்படத்தின் வெற்றி எப்படிப்பட்ட படத்தை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்பதை எனக்குக் கற்றுக் கொடுத்தது.  மேலும் என் அப்பா அம்மாவை சந்தோசப்படுத்திப் பார்க்கும் வாய்ப்பை எனக்கு இந்த ப்ளூ ஸ்டார் கொடுத்திருக்கிறது.

ராஜேஷ் என்னும் இந்தக் கதாபாத்திரம் இன்று இந்த அளவிற்கு பேசப்படுகிறது என்றால் அதற்கு முழு முதற்காரணம் வசனம் எழுதிய எழுத்தாளர் தமிழ் பிரபா மற்றும் இயக்குநர் ஜெயக்குமார் இருவரும் தான். அவர்களுக்கு பெரிய நன்றி.  எழுத்தாளர் ஒரு படத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை நான் முதலில் என் அப்பாவிடம் இருந்து கற்றுக் கொண்டேன்.. இப்பொழுது ப்ளூ ஸ்டார் படத்தின் மூலம் அது மீண்டும் நிரூபனமாகி இருக்கிறது. என் அப்பா, எத்தனையோ நடிகர்களுக்கு நான் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருக்கிறேன்… ஆனால் என் மகனுக்கு என்னால் அப்படி ஒரு வெற்றியைக் கொடுக்க முடியவில்லையே என்று கண்கலங்கி இருக்கிறார். ப்ளூ ஸ்டார் படத்தின் வெற்றி அந்தக் கண்ணீரைத் துடைத்திருக்கிறது. அதற்காகவும் இப்படக்குழுவினருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். இந்த வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்து என் அப்பா இயக்குநர் கே.பாக்யராஜ் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அது மிகவும் எமோஷனலாக இருந்தது” என்றார். 

Next Story

“எனக்கென்று ஒரு அடையாளம் இல்லையே என்று கவலைப்பட்டேன்” - ப்ருத்வி பாண்டியராஜன்

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
Prithvirajan speech in blue star success meet

'நீலம் புரொடக்‌ஷன்ஸ்' சார்பாக பா. ரஞ்சித் தயாரிப்பில் ஜெய்குமார் இயக்கத்தில் ஷாந்தனு, அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம்  'ப்ளூ ஸ்டார்'. கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவான இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். கடந்த 25 ஆம் தேதி வெளியான இப்படம் நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது. இந்த வெற்றியைப் படக்குழு கேக் வெட்டிக் கொண்டாடியது.

இப்படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்ற நிலையில், பா. ரஞ்சித், அஷோக் செல்வன், ஷாந்தனு, கீர்த்தி பாண்டியன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர். அதில் ப்ருத்வி பாண்டியராஜன் பேசுகையில், “இப்படி ஒரு வெற்றிக்காகத்தான் நான் 18 ஆண்டுகளாக காத்துக் கொண்டு இருந்தேன்… எல்லோரும் என்னை பாண்டியராஜனின் பையன்  என்று சொல்லும் போது ஆரம்பத்தில் சந்தோசமாக  இருந்தது. பின்னர் எனக்கென்று ஒரு அடையாளம் இல்லையே என்று கவலைப்பட்டேன்… ஆனால் இன்று ப்ளூ ஸ்டார் படத்தைப் பார்த்துவிட்டு, எல்லோரும் என்னை என் பெயரைக் கூட சொல்லிக் கூப்பிடாமல் என் கதாபாத்திரத்தின் பெயரான சாம், சாம் என்று சொல்லிக் கூப்பிடும் போது மிகவும் சந்தோசமாகவும் பெருமையாகவும் இருந்தது. இந்த வெற்றியை எனக்குக் கொடுத்த இயக்குநர் ஜெயக்குமாருக்கும் என் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர் இயக்குநர் பா.ரஞ்சித்திற்கும் லெமன் லீஃப் புரொடக்‌ஷன்ஸ் கணேசமூர்த்தி மற்றும் சவுந்தர்யாவுக்கும் நன்றிகள்.

அசோக்செல்வன் ஒரு தன்னலமற்ற கதாநாயகன். தான் மட்டும் ஸ்கோர் செய்தால் போதும் என்று நினைக்காமல் தன்னோடு சேர்ந்து நடிப்பவர்களும் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட நடிகர், எனக்குத் தெரிந்து அசோக் மட்டும் தான். ஆரம்பத்தில் இருந்தே என்னிடம், ‘இப்படம் கண்டிப்பாக உனக்கு பெரிய திருப்புமுனையாக இருக்கும், அவசரப்படாமல் பொறுமையாக இரு..’ என்று கூறினான். அவனுக்கு மீண்டும் நன்றி. இப்படத்தில் நான் இன்று இருக்கிறேன் என்றால், அதற்கு காரணம் என் நண்பன் சாந்தனு தான். அவன் தான் இப்படத்தின் ஆடிஸன் போய்க் கொண்டிருப்பதை என்னிடம் தெரிவித்தான். அவனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்” என்று பேசினார்.