
தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் பதவி காலம் முடிந்ததை ஒட்டி, புதிய தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று சென்னையில் நடைபெற்றது. அந்த தேர்தலில், நயினார் நாகேந்திரன் வேட்புமனுத் தாக்கல் செய்ததால் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து இன்று (12-04-25) சென்னை வானகரம் பகுதியில் பா.ஜ.க சார்பில் மாநிலத் தலைவர் அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதையொட்டி நயினார் நாகேந்திரனுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், பா.ஜ.க. தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக ஆதரவாளர் நடிகை நமிதா, செய்தியாளர்களை சந்தித்து நயினார் நகேந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “2026 தேர்தலுக்காக பா.ஜ.க-வினர் உழைத்து வருகிறார்கள். இப்போது புது மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்துக்கள் சொல்கிறேன். பாஜக-வின் மரபு தொடரும். பாஜக - அதிமுக கூட்டணி பவர்ஃபுல்லா இருக்கும். ஏற்கனவே இந்த கூட்டணி இருந்ததால் சூப்பர் ஹிட் அடிக்கும்” என்றுள்ளார்.