
விஜய் சேதுபதி தற்போது ஆறுமுகக் குமார் இயக்கத்தில் எஸ், மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெயின் மற்றும் பாண்டிராஜ் இயக்கத்தில் இன்னும் பெயரிடாத படத்தை கைவசம் வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு ஜூன் முதல் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விஜய் சேதுபதி நடிக்கும் புது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி துரை செந்தில் குமார் இயக்கத்தில் இவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் சிகுமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். முன்னதாக சசிகுமார் நடித்த சுந்தர பாண்டியன் படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
துரை செந்தில் குமார், எதிர் நீச்சல், கொடி, பட்டாஸ் ஆகிய படங்களைத் தொடர்ந்து கடைசியாக கருடன் படத்தை இயக்கியிருந்தார். இப்போது லெஜண்ட் சரவணனை வைத்து படமெடுத்து வருகிறார். இதை முடித்துவிட்டு விஜய் சேதுபதி படத்தை இயக்குவார் என சொல்லப்படுகிறது. கருடன் பட விழா ஒன்றில் விஜய் சேதுபதி துரை செந்தில்குமாருடன் ஒரு படம் நடிக்கும் விருப்பத்தை தெரிவித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.