Skip to main content

‘என் அருகில் நின்ற அஜித் ரசிகர் தீக்குளிக்க முயன்றார்’- சாந்தனு ட்வீட்டால் பரபரப்பு

Published on 09/08/2019 | Edited on 09/08/2019

இந்த வருடத்திலேயே அஜித் நடிப்பில் வெளியாகும் இரண்டாவது படம் நேர்கொண்ட பார்வை. இது ஹிந்தி படமான பிங்க் படத்தின் ரீமேக். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார்.
 

shanthanu

 

 

நேற்று வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பெண்களுக்கு நடைபெறும் அநீதியை பற்றி பேசும் இந்த படம், நல்ல சமூக கருத்தையும் கொடுக்கிறது. 
 

இந்நிலையில், நடிகர் சாந்தனு இந்த படத்தை பார்க்க டிக்கெட் எடுப்பதற்காக சத்யம் சினிமாஸ் சென்றபோது அஜித் ரசிகர் ஒருவர் டிக்கெட் கிடைக்காத விரக்தியில்  பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றதாகவும். அஜித் ரசிகர்கள் மற்றும் எந்த ரசிகராக இருந்தாலும் இதைபோல முயற்சி செய்யாதீர்கள். அவரை போலீஸ் கைது செய்துள்ளது என்று ட்விட்டரில் தெரிவித்திருந்தார். பின்னர், நான் முன்பு போட்டிருக்கும் ட்வீட்டை வைத்து யாரும் கேலி செய்ய வேண்டாம், நெகட்டிவிட்டியை பரப்பாமல் இருங்கள் என்று ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

இதனையடுத்து சிலர் விமர்சிக்கவும், சிலர் கலாய்க்கவும் செய்தனர். இந்த ட்வீட் தற்போது சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்