
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இன்று பிறந்தநாள் காண்கிறார். இதையொட்டி திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கார்த்திக் சுப்புராஜ் தற்போது இயக்கி வரும் ரெட்ரோ படக்குழு வாழ்த்து தெரிவித்து படப்பிடிப்பு தள வீடியோக்களை எடிட் செய்து வெளியிட்டிருந்தது. இதையடுத்து இப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து “எதாவது அப்டேட் இருக்கா” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் ரெட்ரோ படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இரண்டாவது பாடலாக ‘கனிமா...’ என்ற பாடல் வருகிற 21ஆம் தேதி வெளியாகும் என கார்த்திக் சுப்புராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு புது போஸ்டரையும் பகிர்ந்துள்ளார். அதில் இப்படத்தில் இருந்து வெளியான முதல் பாடலில் இருந்த கெட்டப்பை விட இதில் மாறுபட்டு இருக்கிறார்.
ஸ்டோன் பெஞ்ச் மற்றும் சூர்யாவின் 2டி நிறுவனம் இணைந்து தயாரிக்கும் ரெட்ரோ படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் உள்ளிடோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மே 1ஆம் தேதி திரைக்கு வருகிறது.