![ponniyin selvan sol song Lyric Video released](http://image.nakkheeran.in/cdn/farfuture/Pxz8CSGi8cXKUq1Ra9u4vVhOhmyhki_Xvant1nD3m-s/1663337363/sites/default/files/inline-images/13_71.jpg)
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் வருகிற 30 ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. படம் திரைக்கு வருவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ப்ரொமோஷன் பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றனர் படக்குழு.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் 'சொல்' பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ள த்ரிஷாவும் வானதி கதாபாத்திரத்தில் நடித்துள்ள சோபிதா துலிபாலாவும் இடம்பெற்றுள்ளார்கள். மேலும் பாடலில் வரும் 'போராளியா சொல்... ஓடோடியா சொல்...' என்ற வரிகள் இளைஞர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.