![si](http://image.nakkheeran.in/cdn/farfuture/_Rw_Vdgl7WLKYaW0j39rfHjkBiM5vZjyJw70XSX5PBc/1605964984/sites/default/files/inline-images/manadu-2-im.jpg)
நடிகர் சிம்பு, தற்போது நடித்து வரும் படம் 'மாநாடு'. கதாநாயகியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கிறார். வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை, சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். தற்போது பாண்டிச்சேரியில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், தீபாவளியன்று, சிம்பு தற்போது நடித்து முடித்துள்ள 'ஈஸ்வரன்' படத்தின் டீஸர் வெளியானது. அதற்கு வாழ்த்துத் தெரிவித்த வெங்கட் பிரபு, மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் எனத் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக், நவம்பர் 21 ஆம் தேதி காலை, 10.44 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, இன்று காலை வெளியானது.
“When Injustice Rises ..... I will appear”
— Silambarasan TR (@SilambarasanTR_) November 21, 2020
⁃Abdul Khaaliq –#Maanaadu Second look @vp_offl#STR #SilambarasanTR #vp09 #maanaadu #maanaadufirstlook #abdulkhaaliq #aVPpolitics #maanaadusecondlook pic.twitter.com/KO4AQpPEPx
இந்தநிலையில் எந்த முன்னறிவிப்புமின்றி, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக, மாநாடு படத்தின் செகண்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.