தமிழ் பிக்பாஸ் 3 போட்டியின் பங்கேற்பாளரான மீரா மிதுன் மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்தவர் ஜோ மைக்கேல். மீரா மிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கும்போது அவர் குறித்து நிறைய புகார்களை சமூகவலைதளங்களில் தெரிவித்திருந்தார். இவர் மிஸ் தமிழ்நாடு நிகழ்ச்சியின் ஒருங்கணைப்பாளராக செயல்பட்டுள்ளார்.
இதன் மூலம்தான் மீரா மிதுனுக்கும் ஜோவுக்கும் இடையே பிரச்சனை உருவானதாக சொல்லப்படுகிறது. இருவரும் ஒவ்வொருத்தர் குறித்து ஊடகங்களில் புகார் கூறி வந்தனர்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் பெண்கள் குறித்து இழிவாக வீடியோ வெளியிட்டதாக ஜோ மீது அடையாது போலீஸில் புகாரளிக்கப்பட்டது. இதுதொடர்பாக அடையாறு மகளிர் போலீஸார் விசாரணைக்காக இரு முறை சம்மன் அனுப்பியும், ஜோ ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் அடையாறு மகளிர் போலீசார் விசாரணைக்கு வருமாறு வீட்டுக்கு சென்று அழைத்தனர். அப்போது பெண்காவலர்களை ஜோ மைக்கேல் பிரவீன் தரக்குறைவாக பேசி தாக்கியுள்ளார். இது தொடர்பாக கொலை மிரட்டல் விடுத்தல், மானபங்கம் செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் ஜோமைக்கல் பிரவீன் மீது வழக்கு போடப்பட்டது. அவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.