![Arun Matheswaran](http://image.nakkheeran.in/cdn/farfuture/jprRQxo9fA-uoi7F04HvhykG4TG56YnZnxQ0Pa5J-G0/1651151652/sites/default/files/inline-images/183_4.jpg)
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள சாணிக்காயிதம் திரைப்படம் வரும் மே 6ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரனை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்த சந்திப்பில் சாணிக்காயிதம் படம் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்ட அவரிடம், அடுத்ததாக தனுஷை வைத்து அவர் இயக்கவுள்ள படம் குறித்து கேட்டோம். அதற்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு...
"என்னுடைய முதல் இரு படங்கள் மாதிரி அந்தப் படம் இருக்காது. பெரிய பட்ஜெட்டில் பண்ணக்கூடிய படம். ஆக்ஷன் அட்வெஞ்சர் ஜானர் படமாக இருக்கும். இது ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி எழுதுன கதை. வழக்கமான என் படங்களில் இருந்து வித்தியாசமான ஒன்றை எதிர்பார்க்கலாம்". இவ்வாறு இயக்குநர் அருண்மாதேஸ்வரன் தெரிவித்தார்.