ட்ரூ லைஸ், டெர்மினேட்டர், பிரிடேட்டர் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து உலகம் முழுவதும் தனக்கான ரசிகர்களை கொண்டவர் அர்னால்ட். இவர் கலிஃபோர்னியா மாகாணத்தின் கவர்னராகவும் இருந்தார். 71 வயதாகும் இவர் மீண்டும் ஜர்னி டூ சீனா, டெர்மினேட்டர் டார்க் பேட் ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார்.
![arnold](http://image.nakkheeran.in/cdn/farfuture/IJyCQB2q_f5hSpIzyzfHWN0E0vVNQOx86ua8F3ZljAc/1558332438/sites/default/files/inline-images/arnold.jpg)
இந்நிலையில் தென்னப்பிரிக்காவில் நடந்த அர்னால்ட் கிளாசிக் என்ற விளையாட்டு நிகழ்ச்சியில் அர்னால்டு கலந்து கொண்டார். அப்போது அங்கிருந்தவர்களிடம் விளையாட்டு தொடர்பாக அர்னால்டு பேசிக்கொண்டிருக்கையில் திடீரென மர்ம நபர் ஒருவர் அர்னால்டு முதுகில் தனது கால்களால் தாக்கினார். சற்றும் எதிர்பாராமல் இச்சம்பவம் நடந்ததால் அர்னால்டு நிலைகுலைந்தார்.
![natpuna ennanu threiyuma](http://image.nakkheeran.in/cdn/farfuture/V52374mXNYXtvIoKLxyh5KZCKXH_9z5glrki0AGnyVw/1558332469/sites/default/files/inline-images/336x-105_8.png)
உடனடியாக அங்கிருந்தவர்கள் அர்னால்டு முதுகில் மிதித்தவரை மடக்கி பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அர்னால்டை உதைத்தவர் யார்? எதற்காக அவரை தாக்கினார் என்ற காரணங்கள் தெரியவில்லை. கைதானவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.