
ஜெயம் ரவி தனது பெயரை ரவி மோகன் என மாற்றிய நிலையில் தற்போது ‘ஜீனி’, ‘கராத்தே பாபு’ ‘பராசக்தி’ ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் பராசக்தி படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மூன்று படத்தின் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கராத்தே பாபு மற்றும் பராசக்தி படப்பிடிப்பில் இருக்கிறது. ஜீனி படப்பிடிப்பு முடிந்ததாக சொல்லப்படும் நிலையில் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
இந்த நிலையில் ரவி மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சிறிய வீடியோவை வெளியிட்டு மெசேஜ் சொல்லியுள்ளார். அதில் “2025 ஆரம்பிச்சு ஒரு மாசம் ஓடிடுச்சி. அல்லது பறந்துடுச்சி. இந்த வருஷம் நீங்க எது பண்ணாலும் நிம்மதியா பண்ணுங்க, சந்தோஷமா பண்ணுங்க, பொறுமையா பண்ணுங்க. எல்லாரும் சந்தோஷமா, நிம்மதியா இருப்பீங்கன்னு நம்புறேன். அதே மாதிரி இந்த வருஷம் எது பண்ணாலும் அன்பு மற்றும் கருணையுடன் பண்ணுங்க” என கூறியுள்ளார்.