விடுதலை பாகம் 2 படத்தை முடித்த வெற்றிமாறன் தற்போது சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்கி வருகிறார். படத்தின் அரம்பக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை தாணு தயாரிக்க ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்துக்காக சூர்யா மாடுபிடி வீரர்களிடமிருந்து ஏறு தழுவலின் நுட்பங்களை பயின்ற காட்சிகள் கடந்த 2022ஆம் ஆண்டு சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது.
இதையடுத்து எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்தது. பின்பு லண்டனில் காளைகள் போல் ஒரு ரோபோவை உருவாக்கி வருவதாகவும் அமீர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் வெற்றிமாறன் கூறியிருந்தார். இந்த நிலையில் படத்தின் பணிகள் தீவிரப்படுத்தியதை குறிக்கும் வகையில் சூர்யா மற்றும் வெற்றிமாறனுடன் இருக்கும் புகைப்படத்தை தாணு கடந்த தைப் பொங்கலை முன்னிட்டு எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்த நிலையில் இப்படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஐஸ்வர்யா லெக்ஷ்மி இப்படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் தற்போது தமிழில் கமலின் தக் - லைஃப், சூரியின் மாமன் ஆகிய படங்களை வைத்துள்ளார். இதையடுத்து வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.