Skip to main content

தோனி ஃபேர்வெல் போட்டியில் விளையாட முடியாமல் போனது  ஏன்? - முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் விளக்கம்!

Published on 01/07/2021 | Edited on 01/07/2021

 

dhoni

 

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி, கடந்தாண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி திடீரென ஓய்வுபெறுவதாக அறிவித்தார். இதனால் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை இறுதி போட்டியே, தோனியின் இறுதி சர்வதேச போட்டியாக அமைந்தது. தோனி ஓய்வை அறிவித்தபோது, அவருக்கு  ஃபேர்வெல் போட்டி நடத்தப்பட வேண்டும் என ரசிகர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது.

 

இருப்பினும் அவருக்கு ஃபேர்வெல் போட்டி நடத்தப்படவில்லை. இந்தநிலையில் தோனிக்கு ஃபேர்வெல் போட்டியில் விளையாடாதது  ஏன் என்பது குறித்து முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் சரந்தீப் சிங் விளக்கமளித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், "கடந்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த 2020 ஐ.சி.சி டி 20 உலகக் கோப்பையில் தோனி விளையாட விரும்பினார். ஆனால் கரோனா தொற்றின் காரணமாக உலகக்கோப்பை போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் ஓய்வு பெற இதுவே சரியான நேரம் என தோனி நினைத்தார்" என கூறியுள்ளார்.

 

தொடர்ந்து அவர், " ஒருவேளை உலகக்கோப்பை போட்டிகள் நடந்திருந்தால், தோனி அதில் விளையாடியிருப்பார். அவருக்கு ஃபேர்வெல் போட்டியும் கிடைத்திருக்கும்" எனவும் கூறியுள்ளார்.