Skip to main content

தடுமாறிய ஆஸி. ஆல் அவுட்; இந்திய அணிக்கு மீண்டும் கை கொடுக்கும் சுழல்

Published on 17/02/2023 | Edited on 17/02/2023

 

The Stumbling Aussie; The spin that gives back to the Indian team

 

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. 

 

முதல் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 400 ரன்களை குவித்தது. தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா 91 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வியடைந்தது. இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

இந்நிலையில் டெல்லியில் இன்று அருண் ஜெட்லி மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியிலும் இந்திய அணிக்கு சுழல் கைகொடுக்க ஆஸ்திரேலியா தொடர்ந்து தடுமாறியது. அஸ்வின் மூன்று விக்கெட்களையும், ஜடேஜா மூன்று விக்கெட்களையும் ஷமி நான்கு விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தினர்.

 

அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணியில் கவாஜா 81 ரன்களை எடுத்து அவுட்டாக ஹேண்ட்ஸ் கோப் 72 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது.