Published on 23/03/2018 | Edited on 23/03/2018

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் ப்ராட். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல்நாள் ஆட்டத்தில் விக்கெட் எடுத்ததன் மூலம் 400 விக்கெட்களை கடந்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
400 விக்கெட்டுகளை கடந்த 15வது பௌலர் இவர். இதற்குமுன் கபில்தேவ் (437), ரிச்சர்ட் ஹாட்லீ (431), ஷான் போலாக் (421), ஸ்டெய்ன்(419), ஹர்பஜன் சிங்(417), ரங்கனா ஹேரத் (415), வாசிம் அக்ரம் (414), கர்ட்லி அம்ப்ரோஸ் (405) ஆகியோர் இந்த எலைட் குழுவில் உள்ளனர்.
இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் இவர் 800 விக்கெட்களை எடுத்துள்ளார். ஷேன் வார்னே 708 விக்கெட்களுடனும், அனில் கும்ப்ளே 619 விக்கெட்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.