Skip to main content

ஒருவழியாக மீண்டு வரும் மும்பை!

Published on 05/05/2018 | Edited on 05/05/2018
mi

 

ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

நேற்று இந்தூரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக கிறிஸ் கெய்ல் 40 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் விளாசினார்.

இதையடுத்து 175 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரரான லீவிஸ் 10 ரன்களிலேயே முஜீப் போட்ட பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் சூர்ய குமார் யாதவ் மற்றும் இஷான் கிஷான் இருவரும் ஜோடி சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சூர்ய குமார் யாதவ் 42 பந்துகளில் 57 ரன்கள் விளாசினார். இஷான் கிஷான் 19 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். 

இதனைத்தொடர்ந்து வந்த பாண்டியா, ரோஹித் ஷர்மா பொறுப்பாக ஆடியதால், மும்பை அணி 175 என்ற இலக்கை 19வது ஓவரிலேயே கடந்து வெற்றியை சுவைத்தது. மும்பைக்கு இது மூன்றுவது வெற்றி, பஞ்சாப் அணிக்கு இது ஐந்துதாவது தோல்வி ஆகும்.