Published on 21/08/2020 | Edited on 21/08/2020
![mariyappan thangavelu selected for rajivgandhi khel ratna award](http://image.nakkheeran.in/cdn/farfuture/nw3wmNku0yvf7qExlPaXjGMtia484xI5Qm9LEXwDKk4/1598010534/sites/default/files/inline-images/gjgjg.jpg)
தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட உள்ளது.
மத்திய அரசு சார்பில், ஆண்டுதோறும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா’, ‘அர்ஜூனா’, ஆகிய விருதுகளும், சிறந்த வீரர்களை உருவாக்கும் பயிற்சியாளர்களுக்கு ‘துரோணாச்சார்யா’ விருதும் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது யார்யாருக்கு வழங்கப்படுகிறது என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 2016 -ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.