
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 46 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி.
ஷார்ஜாவில் நேற்றிரவு நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 184 ரன்களை குவித்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் அதிகபட்சமாக ஹெட்மேயர் 45, ஸ்டாய்னிஸ் 39, ஸ்ரேயாஸ் அய்யர் 22 ரன்களை எடுத்தனர்.
அதைத் தொடர்ந்து, விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.4 ஓவரில் 138 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியுற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக தெவாதியா 38, ஜெய்ஸ்வால் 34, கேப்டன் ஸ்மித் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

6 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 10 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரு போட்டிகள் நடக்கிறது. துபாயில் இன்றிரவு 07.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. முன்னதாக அபுதாபியில் இன்று பிற்பகல் 03.30 மணிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடுகின்றன.
6 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு வெற்றிகளுடன் பட்டியலில் 6 ஆவது இடத்தில் உள்ளது.