Skip to main content

தோல்வியில் இருந்து மீளப்போவது மும்பையா? ராஜஸ்தானா? - ஐ.பி.எல். போட்டி #21

Published on 22/04/2018 | Edited on 22/04/2018

மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இந்தப் போட்டி இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ளது.

 

 

இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பின் ஐ.பி.எல். சீசன் 11ன் மூலம் மீண்டும் வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. கடைசியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதிய அந்த அணி, 64 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அதேசமயம், நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, நான்கு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றிபெற்று பின்தங்கிய நிலையில் உள்ளது. 

 

இந்த இரண்டு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 16 போட்டிகளில் 10 - 6 என்ற கணக்கில் மும்பை இந்தியன்ஸ் அணி, வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. அதேசமயம், ஜெய்ப்பூர் மைதானத்தில் இந்த இரண்டு அணிகளும் களமிறங்கிய ஐந்து போட்டிகளில் 3 - 2 என்ற கணக்கில் ராஜஸ்தான் அணி முன்னிலையில் உள்ளது. அதேபோல், 150+ ரன்களை ஜெய்ப்பூர் மைதானத்தில் சேஷிங் செய்த ஒரே அணியும் மும்பை இந்தியன்ஸ்தான்.

 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வரும் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன், இன்றைய போட்டியில் 64 ரன்கள் எடுத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சார்பில் ஆயிரம் ரன்களைக் கடந்த ஐந்தாவது வீரர் என்ற சாதனை படைப்பார். ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மெக்லேக்னன் வெறும் 11 பந்துகளில் 4 முறை சஞ்சு சாம்சனின் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். 

Next Story

"இருவரும் மோதி பார்க்கலாமா என தோனியிடம் சவால் விட்டேன்" - பிராவோ பகிர்ந்த சுவாரசிய தகவல்....

Published on 20/04/2020 | Edited on 20/04/2020

2018 ஐ.பி.எல். தொடரின்போது தோனிக்கும், தனக்கும் இடையே நடைபெற்ற ஓட்டப்போட்டிக்கு பின்னால் உள்ள சுவாரசிய காரணத்தை பகிர்ந்துகொண்டுள்ளார் பிராவோ.

 

story behind dhoni and bravo running race

 

இன்ஸ்டாகிராம் தளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய பிராவோ, "2018 ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரின் ஒரு போட்டியின்போது, தோனி என்னை வயதானவர், வயதானவர் எனக்கூறி சீண்டிக்கொண்டே இருந்தார். மேலும், எனக்கு வயதாகிவிட்டதால்தான் வேகமாக ஓடமுடியவில்லை எனக்கூறி கிண்டல் செய்தார். அப்போது நான் அவரிடம், இருவரும் ஆடுகளத்தில் ஓடிப் பார்க்கலாமா, யார் வேகமாக ஓடுகிறார்கள் என்று பார்ப்போம் என்றேன்.
 

 nakkheeran app



முதலில் அதற்கு மறுத்த தோனி பின்னர் ஒப்புக்கொண்டார். ஐ.பி.எல். தொடர் முடிந்தபிறகு சவாலை வைத்துக்கொள்ளலாம். ஏனென்றால் போட்டியின் நடுவே இந்த சவாலால் யாராவது ஒருவருக்குத் தசைப்பிடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இறுதிச்சுற்றுக்குப் பிறகு ஓட்டப் பந்தயத்தை வைத்துக்கொள்ளலாம் என்றேன். அப்படிதான் அந்த போட்டி நடைபெற்றது. அது மிகவும் கடுமையான போட்டி. நூலிழையில் அவர் என்னைத் தோற்கடித்தார். அவர் விரைவாக ஓடினார்" என்று கூறியுள்ளார். 

 

 

Next Story

சன்ரைசர்ஸின் மாஸ் பவுலிங்கா? டெல்லியின் அசத்தல் பேட்டிங்கா?

Published on 08/05/2019 | Edited on 08/05/2019

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகள் இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் மோதவுள்ளன. தரவரிசை பட்டியலில் 18 புள்ளிகள் பெற்று 3 வது இடத்தில் உள்ள டெல்லி அணி 12 புள்ளிகள் மட்டுமே பெற்று நான்காவது இடத்தில் உள்ள ஹைதராபாத் அணியுடன் வாழ்வா சாவா போட்டியில் விளையாடவுள்ளது. 

 

delhi capitals versus sunrisers hyderabad eliminator match

 

 

இந்த ஆண்டு இளம் கேப்டன், பெரும்பாலான இளம் வீரர்களுடன் களமிறங்கிய டெல்லி அணி 6 ஆண்டுகளுக்கு பிறகு ஃப்ளேஆப் சுற்றுக்கு சென்றுள்ளது. தற்போது விளையாடும் அணிகளில் இதுவரை இறுதிப்போட்டியை சந்திக்காத ஒரே அணி டெல்லி அணி மட்டுமே. டெல்லி அணி நாக் அவுட் போட்டிகளில் ஒரு முறை கூட வெற்றி பெற்றதில்லை என்ற நிலையை மாற்ற தயாராகி வருகிறது டெல்லி.  

டெல்லி அணிக்கு லீக் போட்டிகளில் சிறப்பாக பவுலிங் செய்து வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ரபாடா இல்லாமல் விளையாடுவது சற்று பலவீனமாக அமையும். 12 போட்டிகளில் 25 விக்கெட் எடுத்து இந்த சீசனில் அதிக விக்கெட் எடுத்த பவுலர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். 

அதே போல ஹைதராபாத் அணியில் அதிரடி ஒப்பனிங் பேட்ஸ்மேன்களான வார்னர், பேர்ஸ்டோவ் ஆகியோர் இல்லாமல் இருப்பது அந்த அணிக்கு பலவீனமாக இருக்கும். மார்டின் குப்தில், வில்லியம்சன் ஆகியோர் அதிக பொறுப்புடன் விளையாடிய வேண்டிய நிலையில் ஹைதராபாத் அணி உள்ளது. மனிஷ் பாண்டே கடந்த சில போட்டிகளில் 1-வது விக்கெட்டிற்கு களமிறங்கி சிறப்பாக விளையாடி வருகிறார். பவுலிங்கில் புவனேஷ், ரசித் ஆகியோர் கலக்கி வருகின்றனர். 

ஷிகர் தவானை டிரேடிங் விண்டோ மூலம் 3 வீரர்களை கொடுத்து எடுத்தது டெல்லி அணி. அதற்கு தக்க பலன் கிடைத்துள்ளது. இந்த தொடரில் 486 ரன்கள் எடுத்து டெல்லி அணிக்கு சிறப்பான ஒப்பனிங் தந்துள்ளார். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டத்தின் போக்கிற்கு ஏற்ப விளையாடி அணியின் வெற்றிக்கு உதவியுள்ளார். இந்த தொடரில் 442 ரன்கள் எடுத்துள்ளார். அதிரடி இளம் வீரர் ரிஷப் பண்ட் இந்த போட்டியில் தனது அதிரடியை காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 14 போட்டிகளில் 401 ரன்கள் எடுத்துள்ளார். டெல்லி அணிக்கு பலமாக இருப்பது டாப் நான்கு பேட்ஸ்மேன்கள் தான். 

பவுலிங்கில் அமித் மிஸ்ரா எகானமி ரேட் 6.33. மற்ற டெல்லி ஸ்பின்னர்களின் எகானமி ரேட் 9-க்கும் அதிகமாக உள்ளது. அக்சர் படேல் (9.35), டிவத்தியா (9.00), லேமிச்சேன் (9.13). டெல்லி அணி ஸ்பின் பவுலிங்கில் பலவீனமாக இருப்பதை காட்டுகிறது.  

 

delhi capitals versus sunrisers hyderabad eliminator match

 

 

இந்த ஆண்டு டெல்லி அணியின் பெயர், ஜெர்சி, பயிற்சியாளர்கள் என அனைத்தும் மாற்றப்பட்டு புது அணியாக களமிறங்கி 2012-ஆம் ஆண்டிற்கு பிறகு ஃப்ளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதற்கு பயிற்சியாளர்கள் துறையில் உள்ள கங்குலி மற்றும் பாண்டிங் ஆகியோரின் அனுபவம் இளம் வீரர்களுக்கு பெரும் உதவியாக இருந்துள்ளது. 

ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், பிரித்வி ஷா, அக்சர் படேல் என டெல்லி அணியின் முக்கிய இளம்வீரர்கள் டிராவிட்டிடம் பயிற்சி பெற்றவர்கள் என்பது கவனிக்கத்தக்கது. 

இரு அணிகளும் இதுவரை விளையாடிய 14 போட்டிகளில் 9 முறை ஹைதராபாத் அணியும், 5 முறை டெல்லி அணியும் வெற்றி பெற்றுள்ளது.  விசாகப்பட்டினத்தில் இரு அணிகளும் ஒரே ஒரு போட்டியில் மோதிய நிலையில் அதில் டெல்லி அணி வென்றுள்ளது.

முதல் பேட்டிங் செய்த அணி 22 முறையும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 34 முறையும் வெற்றி பெற்றுள்ளது. முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் 156, இரண்டாவது இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் 148. பிட்சின் தன்மையில் மாற்றம் இல்லாமல் இருந்தால் இந்த மைதானத்தில் அதிக அளவில் ஸ்கோர் குவிக்க இயலாது. ஸ்பின் பவுலர்களுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதிக ரன்கள் எடுத்தது 223/3 (சென்னை vs ஹைதராபாத்), குறைந்தபட்ச ரன்கள் 80/10 (டெல்லி vs ஹைதராபாத்), அதிகபட்ச ரன்களை சேஸிங் செய்தது 217/7 (ராஜஸ்தான் vs டெக்கான் சார்ஜர்ஸ்), குறைந்தபட்ச ரன்களை டிஃபண்ட் செய்தது 129/8 (மும்பை vs புனே).

டெல்லி கேபிடல்ஸ்:
பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), காலின் இன்கிராம், அக்சர் படேல், கிறிஸ் மோரிஸ், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் /கீமோ பால், ட்ரென்ட் போல்ட்/லேமிச்சேன், அமித் மிஸ்ரா, இஷாந்த் சர்மா.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
மார்டின் குப்தில், சஹா (விக்கெட் கீப்பர்), மனிஷ் பாண்டே, கேன் வில்லியம்சன் (கேப்டன்), விஜய் சங்கர், யூசுப் பதான்/அபிஷேக் சர்மா, முகம்மது நபி, ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, சந்தீப் சர்மா/ பசில் தம்பே.