Published on 24/07/2021 | Edited on 24/07/2021

ஒலிம்பிக் போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்றுவரும் நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் நேற்று (23.07.2021) தொடங்கியது.
இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கில் நேற்று நடந்த ஆடவர் ஹாக்கி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்திய அணி. நியூசிலாந்து அணியுடனான ஏ பிரிவு போட்டியில் 3க்கு 2 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. கடைசி நேரத்தில் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் சிறப்பாக செயல்பட்டு நியூசிலாந்தின் இரண்டு பெனால்டி கார்னர் வாய்ப்புகளைத் தடுத்துள்ளார். இந்திய அணி தரப்பில் ஹர்மன்பிரீத் சிங் இரண்டு கோல்களும், ஆர்.பி. சிங் ஒரு கோலும் அடித்து வெற்றிக்கு உதவினர்.