
கேரளாவில் பரபரப்பான சாலையில் சிக்கித் தவித்த பூனையை காப்பாற்றச் சென்ற இளைஞர் வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் மன்னூத்தி பகுதியில் இரவு நேரத்தில் பரபரப்பான சாலையில் பூனை ஒன்று சிக்கிக் கொண்டிருந்தது. வாகனங்களுக்கு இடையே தப்பிக்க முடியாமல் பூனை திணறிக் கொண்டிருந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த சிஜோ என்ற இளைஞர் இதனை பார்த்துள்ளார்.
நடுரோட்டில் சிக்கித் தவிக்கும் பூனையைக் காப்பாற்றலாம் என கருணை உள்ளதோடு என இறங்கி ஓடி வந்துள்ளார். அப்போது வேகமாக வந்த கார் ஒன்று சிஜோ மீது மோதியது. இதில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிஜோ தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.