இந்திய சுழற்பந்துகளை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி திணறல்!
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்த இந்திய அணி, இலங்கை அணியை 216 ரன்களில் ஆல் அவுட் ஆக்கியுள்ளது.
தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய இலங்கை பேட்ஸ்மன்கள், பின்னர் இந்திய சுழல் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இலங்கை அணியில் அதிகபட்சமாக திக்வெல்லா 64 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய தரப்பில் அக்சர் படேல் 3 விக்கெட்டுகளையும், பம்ரா, சஹால் மற்றும் கேதர் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.