Skip to main content

படத்தை முதலில் பாருங்கள் ! தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

Published on 15/04/2019 | Edited on 15/04/2019

பி.எம் நரேந்திரமோடி திரைப்படத்தை வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இந்த திரைப்படத்தை வெளியீட கூறி தயாரிப்பாளர்கள் உச்சநீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு திரைப்படத்தை பார்க்காமல் ஏன் ? தேர்தல் ஆணையம் தடை செய்தது என்று கேள்வி எழுப்பினார்கள். பின்பு இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் தற்போது நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. மேலும் தேர்தல் விதிமுறைகள் நாடு முழுவதும் அமலில் இருப்பதால் , பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் திரைப்படத்தை தடை விதித்ததாக கூறினார்.
 

narendra modi



அதை தொடர்ந்து திரைப்படத்தை வெளியிடக்கூடாது என எதிர்கட்சிகள் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளதாக வழக்கறிஞர் வாதாடினார். பின்பு இது குறித்து விசாரித்த உச்சநீதிமன்றம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவுக்களை பிறப்பித்தது.  அதில் பி.எம். நரேந்திரமோடி திரைப்படத்தை முதலில் பாருங்கள் . பின்பு தேர்தல் விதியை மீறி கருத்துக்கள் இடம் பெற்றால் தடை விதியுங்கள் என கூறி ஏப்ரல் 22 ஆம் தேதி வழக்கை ஒத்திவைத்தது.


பி.சந்தோஷ் , சேலம் .
 

சார்ந்த செய்திகள்