Published on 18/01/2019 | Edited on 18/01/2019

இந்தியா - ஆஸ்திரேலியா இடையான கடைசி ஒருநாள் போட்டி இன்று மெல்பர்னில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. மேலும் இன்று நடைபெறும் கடைசி ஒரு நாள் போட்டியில் தமிழக வீரர் விஜய் சங்கர் இந்திய அணிக்காக முதல் முறையாக ஒரு நாள் போட்டிகளில் களமிறங்குகிறார்.