16 ஆவது ஐபிஎல் சீசனின் 50 ஆவது லீக் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேபிடல்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய பெங்களூர் அணி 181 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக விராட் 55 ரன்களும் லோம்ரோர் 54 ரன்களும் டுப்ளசிஸ் 45 ரன்களையும் எடுத்தனர். 182 ரன்கள் இலக்கைக் கொண்டு விளையாடிய டெல்லி அணி 16.4 ஓவர்களில் 187 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பிலிப் சால்ட் 87 ரன்களை எடுத்தார். ஆட்டநாயகனாக அவரே தேர்வும் செய்யப்பட்டார்.
இன்றைய போட்டியில் ஒரு அணிக்கு எதிராக 1000 ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் கோலி 5 ஆவது நபராக இணைந்தார். வார்னர் கேகேஆர் அணிக்காக 1075 ரன்களைக் குவித்து முதலிடத்தில் உள்ளார். மேலும் ஐபிஎல்லில் 7000 ரன்களைக் கடந்த முதல் வீரர் ஆனார். 233 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 46 அரைசதங்களுடன் அவர் இச்சாதனையை படைத்துள்ளார். டெல்லி பெங்களூர் இடையேயான கடைசி 5 ஐபிஎல் போட்டியில் பெங்களூர் 4 முறையும் டெல்லி ஒரு முறை மட்டுமே வென்றுள்ளது.