Skip to main content

ஆளுநர் பதவி ஏற்கிறேனா..? - முரளிதரன் பதில்!

Published on 06/12/2019 | Edited on 06/12/2019


இலங்கை கிரிக்கெட் அணியில் சுழல்பந்து வீச்சாளராக ஜொலித்த முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன். முத்தையா முரளிதரன்  ராஜபக்‌ஷேவுக்கு ஆதரவாக பேசி வந்தவர். தற்போது இலங்கையில் நடந்த தேர்தலில் ராஜபக்‌ஷே சகோதாரர்கள் வெற்றி பெற்றதற்கு நேரடியாகவே வாழ்த்துக்கள் கூறியிருந்தார் முத்தையா முரளிதரன்.  எனவே, இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாண பகுதிக்கு ஆளுநராக முத்தையா முரளிதரன் பதவியேற்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. 
 

n



இதற்கு பிரபல நாளிதழுக்கு ஒன்றிற்கு பதில் அளித்துள்ளார் முத்தையா முரளிதரன். அவர் தெரிவித்ததாவது,  " நான் ஆளுநர் ஆவதாக கூறப்படுவது, பேஸ்புக் மூலம் பரவிய ஒரு வதந்தி. எனக்கு அந்த பதவி வ்ழங்கப்படவில்லை. எந்த சந்தர்பத்திலும் நான் அரசியலில் ஆர்வம் காட்டியதில்லை. நான் ஒரு விளையாட்டு வீரன், கிரிக்கெட் வீரர் அரசியல்வாதி அல்ல.  மக்களின் நன்மைக்காக எனது அறக்கட்டளை ஏற்கனவே ஒவ்வொரு ஆண்டும் 60,000 இலங்கை மக்களுக்கு உதவி செய்து வருகிறது. நிச்சயமாக என்னால் முடிந்த அளவுக்கு எந்த வகையிலும் மக்களின் வாழ்வை மேம்படுத்த உதவுவேன்" என தெரிவித்துள்ளார்.