2019 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை இங்கிலாந்து நாட்டில் கடந்த 30 ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் வெள்ளிக்கிழமை ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் அதிரடியாக ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி எளிதில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் அதிரடி ஆட்டக்காரர் கெய்ல் 3 சிக்சர்கள் விளாசினார். இதன் மூலம் உலகக்கோப்பையில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் அவர் முதல் இடத்தை பிடித்துள்ளார். இதற்கு முன் 37 சிக்ஸர்களுடன் தென் ஆப்பிரிக்காவின் டீ வில்லியர்ஸ் மற்றும் கெய்ல் ஆகியோர் 37 சிக்ஸர்கள் அடித்து முதல் இடத்தை பகிர்ந்துகொண்டனர். இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் 3 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் 40 சிக்ஸர்களுடன் கெய்ல் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
இவருக்கு அடுத்து 37 சிக்ஸர்களுடன் டீ வில்லியர்ஸ் இரண்டாம் இடத்திலும், 31 சிக்ஸர்களுடன் ரிக்கி பாண்டிங் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் முதல் பத்து இடங்களில் உள்ள வீரர்களின் கெய்லை தவிர மற்ற அனைவரும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.