Skip to main content

வெளியானது சுரேஷ் ரெய்னாவின் 'BELIEVE'

Published on 14/06/2021 | Edited on 14/06/2021

 

SURESH RAINA

 

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக விளங்கியவர் சுரேஷ் ரெய்னா. இவர் கடந்த ஆண்டு, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றார். இருப்பினும், ‘சின்ன தல’ என ரசிகர்களால் அழைக்கப்படும் இவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடிவருகிறார்.

 

இந்தநிலையில் சுரேஷ் ரெய்னா, பாரத் சுந்தரேசன் என்பவரோடு இணைந்து தனது சுயசரிதையை எழுதியுள்ளார். அதில் சுரேஷ் ரெய்னாவின் கிரிக்கெட் வாழ்வில் மட்டுமின்றி, தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. சுரேஷ் ரெய்னா தனது புத்தகத்திற்கு ‘பீலீவ்’ (believe) என பெயரிட்டுள்ளார்.

 

இந்தப் புத்தகம் தற்போது வெளியாகியுள்ளது. முன்னணி புத்தக கடைகளில் மட்டுமல்லாமல் அமேசான், ஃப்ளிப்கார்ட் தளங்களிலும் இந்தப் புத்தகம் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

சுரேஷ் ரெய்னா குறித்து சூர்யா

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
suriya about suresh raina

ஐபிஎல் தொடர், தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றதை அடுத்து, தற்போது அதே பாணியில் இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் என்ற புதிய கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களைப் போன்று விளையாட வேண்டும் என்ற கனவோடு உள்ள பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்காக இந்த புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சென்னை, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா மற்றும் ஸ்ரீ நகர் என 6 அணிகள் பங்கேற்கவுள்ளன. சென்னை அணியை சூர்யாவும், மும்பை அணியை அமிதாப் பச்சனும், பெங்களூரு அணியை ஹிருத்திக் ரோஷனும், ஸ்ரீநகர் அணியை அக்‌ஷய் குமாரும், ஐதராபாத் அணியை ராம்சரணும் வாங்கியுள்ளனர். 

இந்த போட்டி நேற்று (06.03.2024) மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. அப்போது சச்சின், சூர்யா, அக்‌ஷய் குமார், ராம் சரண், ரவிசாஸ்திரி ஆகியோர் ஆர்.ஆர்.ஆர் பட பாடல் ‘நாட்டு நாட்டு...’ பாடலுக்கு நடனமாடினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. பின்பு இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவும் கலந்து கொண்ட நிலையில், அவரை சூர்யா தனது குழந்தைகளுடன் சந்தித்தார். 

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சுரேஷ் ரெய்னா, தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, சூர்யா குடும்பத்தை சந்தித்தது மகிழ்ச்சி என்றும் விரைவில் சென்னையில் சந்திப்போம் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் சுரேஷ் ரெய்னாவின் பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த சூர்யா, “வாழ்நாள் முழுவதும் உள்ள மெமரிஸ் பிரதர். உங்கள் அன்பிற்கு நன்றி. விரைவில் சென்னையில் சந்திப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.

Next Story

வாஜ்பாய் பயோ பிக்கின் டீசர் வெளியானது

Published on 19/12/2023 | Edited on 19/12/2023
vajpayee biopic teaser released

இந்திய சினிமாவில் பல பயோ-பிக் படங்கள் வெளியாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு தற்போது படங்களாகவும், வெப் சீரிஸ்களாகவும் தயாரிக்கப்படுகின்றன. அந்த வகையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் வாழக்கையைத் தழுவி படங்கள் எடுக்கப்பட்டன. 

அந்த வரிசையில் பாஜகவின் மூத்தத் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் வாழ்க்கை படமாக உருவாகி வருகிறது. இப்படத்தை தேசிய விருது பெற்ற இயக்குநர் ரவி ஜாதவ் இயக்கியுள்ளார். இப்படத்தில் வாஜ்பாய் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் பங்கஜ் திரிபாதி நடித்துள்ளார். இப்படத்தை பானுஷாலி ஸ்டுடியோஸ் மற்றும் லெஜண்ட் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த வருடம் வாஜ்பாயின் பிறந்தநாளான டிசம்பர் 25 ஆம் தேதி வெளியானது.  

மேலும், படத்தை இந்த ஆண்டு வருகிற கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு வாஜ்பாயின் பிறந்தநாளான டிசம்பர் 25 ஆம் தேதி வெளியிடப் படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் இப்படம் 2024 ஜனவரி 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ‘மெயின் அதல் ஹூன்’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரைலர் நாளை வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.