16-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று லண்டனில் கோலாகலமாக தொடக்கம்
16-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் லண்டனில் நேற்று துவங்கி 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 24 பந்தயங்கள் கொண்ட இந்த தொடரில் 205 நாடுகள் பங்கேற்கின்றன. இதுவரை நடந்த சாம்பியன்ஷிப் தொடர்களில் இந்தியா ஒரே ஒரு வெண்கலம் பதக்கம் மட்டுமே பெற்றுள்ளது. இந்த ஆண்டிற்கான போட்டிகளில் இந்திய தரப்பில் 25 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். எனவே, இந்த முறையாவது அதிக பதக்கங்களுடன் வீரர்கள் தாயகம் திரும்புவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.