பெண்கள் மாதவிடாய் காலங்களில் செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா விளக்குகிறார்.
மாதவிடாய் குறித்து இங்கு பேசுவதே குறைவாக இருக்கிறது. குறிப்பிட்ட வயதில் பெண்கள் இனப்பெருக்கம் செய்வதை நிறுத்திக் கொள்கின்றனர். இது இயற்கையாக நடைபெறும் ஒரு நிகழ்வு. அந்தக் காலத்தில் அனைத்து வயதுகளிலும் குழந்தை பெற்றுக்கொள்ளும் பழக்கம் இருந்தது. மெனோபாஸ் என்பது இனப்பெருக்கத்தை முடித்துக் கொள்வதற்காக இயற்கை வகுத்துத் தந்த வழி. இது 42 வயதில் ஆரம்பித்து 55 வயதுக்குள் முடியும்.
சிலருக்கு இது கொஞ்சம் தள்ளிப் போகலாம். ஆனால் தவிர்க்க முடியாது. இது இப்போது பேசுபொருளாக மாறுவதே மகிழ்ச்சியான ஒரு விஷயம். 42 வயதுக்குப் பிறகு தாம்பத்தியத்தின் போது சிலருக்கு ரத்தக்கசிவு ஏற்படும். சிலருக்கு மனதில் பிரச்சனை ஏற்படும். மெனோபாஸ் ஏற்படும் காலத்தை அறிந்துகொள்ள வேண்டும். இந்தக் காலம் என்பது பெண்களுக்கு மிகவும் கடினமான ஒரு காலம். அந்த நேரத்தில் அவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்கும்.அந்த நேரத்தில் பெண்கள் பிரம்மை பிடித்தது போல் இருப்பார்கள். இது குறித்து மலையாளத்தில் ஒரு நல்ல படம் வெளிவந்துள்ளது. இது குறித்த விவாதங்கள் அதிகரித்து மக்களுக்கான புரிதலை ஏற்படுத்த வேண்டும்.