Skip to main content

தூக்கம் இல்லாமல் அவதியா...

Published on 07/02/2019 | Edited on 07/02/2019

உடல் சூடு ,தேவை இல்லாத மன அழுத்தம் ,மற்றும் கவலை இதனால் நம்மில் சிலர் தூங்க முடியாமல் அவதி படுகின்றனர் .இந்தப் பிரச்சனைக்கு உணவு மூலம் தீர்வு காணலாம் எப்படி என்று பாருங்கள் .தயிர் அதிகமாக உணவில் சேர்த்து கொள்ளவும். தலையில் சிறிது தயிர் விட்டு 30 நிமிடங்கள் தேய்த்து குளித்து வர, தூக்கம் நன்றாக வரும்.ஒரு கப் தண்ணீரில் இரண்டு தேக்கரண்டி தேன் விட்டு தூங்குவதற்கு முன் இரவு குடித்து வரவும். வெதுவெதுப்பான பாலில் தேன் கலந்து படுப்பதற்கு முன் குடித்து வரலாம்.
 

sleepless problem

நெய்யில் வறுத்த, ஒரு தேக்கரண்டி சீரகத்தை வாழைப்பழத்துடன் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.சின்ன வெங்காயம் உணவில் நிறைய சேர்த்து இடித்து வரலாம்.சின்ன வெங்காயம் உணவில் நிறைய சேர்த்து கொள்ள வேண்டும். அல்லது பச்சையாக தினமும் 4 மென்று சாப்பிடவும்.தர்பூசணி விதைகளையும், கசகசாவையும சம அளவு சேர்த்து அரைத்து, 3/4 தேக்கரண்டி தினமும் (1-3 வாரம்) காலையிலும், இரவிலும் சாப்பிட்டு வரலாம். கசகசாவை தூள் செய்து, பாலில் கலந்து குடித்து வர நன்றாக தூக்கம் வரும் .வெங்காயத்தை நெய்விட்டு வதக்கி இரவு படுக்கும்போது உண்டு உடன் பசுவின் பால் குடித்து வரலாம்.

உறங்க செல்லுமுன் ஒரு டம்ளர் வெந்நீரில் அரைமூடி எலுமிச்சை சாறு பிழிந்து, இரண்டு தேக்கரண்டி தேன் விட்டு கலக்கி குடித்தால் நல்ல உறக்கம் வரும்.தினசரி ஒரு டஜன் சப்போட்டா பழங்களை சாப்பிட்டு கூடவே ஒரு டம்ளர் பாலையும் சாப்பிட்டு வர, உறக்கம் நன்றாக வரும்.

Next Story

தமிழகத்திலும் அதிகரிக்கும் தெருநாய்க் கடி சம்பவங்கள்

Published on 26/11/2023 | Edited on 26/11/2023

 

nn

 

அண்மையில் சென்னையில் தெருநாய் கடித்து 10 பள்ளி மாணவர்கள் உட்பட 29 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் ஈரோட்டிலும் சிவகங்கையில் இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

அண்மையில் சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் தெரு நாய்கள் குழந்தைகளை கடிப்பது, சாலையில் செல்வோரை கடிப்பது தொடர்பான செய்திகளும், வீடியோ காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழகத்திலும் இதுபோன்ற நிகழ்வுகள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. அண்மையில் சில நாட்களுக்கு முன்பு சென்னை திருவொற்றியூரின் பரபரப்பான சாலை ஒன்றில் 10 பள்ளி மாணவர்கள் உட்பட 29 பேரை தெரு நாய் கடித்துக் குதறியது. அந்த தெருநாயை அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் அடித்தே கொலை செய்தனர்.

 

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் புஞ்சம்புளியம்பட்டி பகுதியில் வீட்டில் புகுந்த நாய் ஒன்று 65 வயது மதிக்கத்தக்க பெண்ணை கடித்துக் குதறியது. பின்னர் வெளியே வந்த அந்த நாய், கண்ணில் பட்டவர்களை எல்லாம் கடித்துக் குதறியது. இதில் பாதிக்கப்பட்ட 65 வயது பெண் உட்பட ஏழு பேர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் சிவகங்கையில் காரைக்குடி கல்லூரி சாலையில் வெறிநாய் ஒன்று விரட்டி விரட்டி கடித்ததில் பெண் உட்பட ஐந்து பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்படியாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தெரு நாய்க் கடி காரணமாக பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

 

 

Next Story

விஜயகாந்த் உடல்நிலை குறித்து தேமுதிக விளக்கம்

Published on 20/11/2023 | Edited on 20/11/2023

 

dmdk explains about Vijayakanth's health

 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து தேமுதிக சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த், உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேமுதிக சார்பில் ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டது.

 

இந்நிலையில் தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அவர் ஓரிரு நாளில் வீடு திரும்புவார். செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாகத் தவறான செய்திகளை வெளியிடும் தொலைக்காட்சிகளைப் பார்த்து யாரும் நம்ப வேண்டாம். இது முற்றிலும் தவறான செய்திகள். இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்பவும் வேண்டாம், யாரும் பரப்பவும் வேண்டாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.