மலத்தை அடக்குவதால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து சித்த மருத்துவர் அருண் விளக்குகிறார்.
பணியில் இருக்கும் பெண்கள் வீட்டுக்கு வந்த பிறகு தான் சிறுநீர் கழிக்க முடியும் என்கிற சூழ்நிலை இருக்கிறது. அதுவே தொற்றுக்கு ஒரு காரணமாக அமைந்து விடுகிறது. 40 வயதைக் கடந்த பெண்களுக்கு இந்தப் பிரச்சனை அதிகம் ஏற்படும். இது தொடர்ந்தால் சிறுநீரக கற்கள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. சிறுநீரகம் தன் செயல்பாட்டினை இழக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றப்பட்டால் தான் அடுத்து நாம் உண்ணும் உணவு உள்ளே சென்று நமக்கு நன்மை பயக்கும்.
மலத்தை அடக்கினால் உடலில் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால் இருதய அடைப்பு வரை ஏற்பட வாய்ப்புண்டு. மாரடைப்பு ஏற்படவும் இது காரணமாக இருக்கிறது. வயிற்றை சுத்தப்படுத்தாமல் விட்டால் செரிமானக் கோளாறு ஏற்படும். அதன் மூலம் உடலில் பல்வேறு பிரச்சனைகள் உருவாகும். இதனால் காய்ச்சல் கூட ஏற்படுகிறது. கொதிக்க வைத்த நீரை அருந்தினால், கிருமிகளால் ஏற்படும் நோய்களிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள முடியும். நம்முடைய அன்றாட உணவில் மோர் நிச்சயம் இருக்க வேண்டும்.
உடலுக்கு நல்ல பாக்டீரியாக்கள் கிடைப்பதற்கு மோர் உதவும். அதுபோலவே தினமும் நாம் நெய்யை உருக்கிச் சாப்பிட வேண்டும். நெய் சாப்பிட்டால் கொழுப்பு அதிகமாகிவிடும் என்று பலர் நினைக்கின்றனர். நெய்யில் உள்ள கொழுப்பு உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு தான். இவற்றை சரியான முறையில் செய்து வந்தால் எந்த நோயும் நம்மை அண்டாது. இவை அனைத்துமே நம்மால் எளிமையாக செய்யக்கூடியவை தான். சரியாக சிறுநீர் கழித்து, மலத்தை வெளியேற்றி, நல்ல உணவுகளை உண்ண வேண்டும். அவ்வாறு செய்தால் நோய்கள் நம்மை நெருங்காது என்பதே சித்தர்களின் வாக்காக இருக்கிறது.