இந்த தலைப்பைப் பார்த்த உடனே நிறைய பேருக்கு எழும் கேள்வி என்ன இப்படி எழுத்திருக்கிறான் இவனுக்கு அறிவு இல்லையா ,இவன் தன் அம்மாவுடன் எப்பயுமே அமர்ந்து ஒன்றாக உணவு உண்பதில்லை போல என்று சிந்திக்க தோணும் .உங்களது சிந்தனை மற்றும் கேள்விகள் நியாயமான ஒன்று தான் .அப்புறம் ஏன் இப்படி சொல்றிங்க என்று எண்ணுபவர்களுக்கு சற்று இதை கொஞ்சம் வாசித்துப் பாருங்கள் உங்களுக்கு கொஞ்சம் நியாயமாக தோன்றும்.
எப்பொழுது ஒரு அம்மா தன் குழந்தைகளுடன் அமர்ந்து சாப்பிடுகிறார்களோ அவர்களுக்கு உணவு ஒழுங்காக ஜீரணமாவது கிடையாது. என்ன என் குழந்தையுடன் நான் அமர்ந்து சாப்பிட்டால் எனக்கு எப்படி ஜீரணம் ஆகாது என்று தாய்மார்கள் கேட்பீர்கள். ஒரு அம்மா தன் குழந்தையுடன் அமர்ந்து சாப்பிடும் பொழுது, அவர் தன் உணவில், கவனம் செலுத்துவதை விட்டு விட்டு குழந்தையை மட்டுமே கவனித்துக் கெண்டிருப்பார். குழந்தையை அதட்டுவார். “சாப்பிடும் போது பேசாதே கறிவேப்பிலையைச் சாப்பிடு, ஒழுங்காக உட்கார்ந்து சாப்பிடு, சட்னி தொட்டுக் கொள், கீழே தொடாதே இப்படி அந்த குழந்தையைக் கவனித்துக் கொண்டே இருப்பார்கள்.
அதனால் குழந்தைக்கு ஊட்டிக் கொண்டே ஒரு தாய் தானும் சாப்பிட்டுக் கொண்டு இருந்தால் அந்த தாயினால் தான் உண்ணும் உணவில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது அதனால் தாயின் உணவு ஒழுங்காக ஜீரணம் ஆகாது. எனவே தாய்மார்கள் முதலில் உங்கள் குழந்தைக்கு மற்றும் உங்கள் வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்களுக்கும் பரிமாறி விட்டு அவர்கள் திருப்தியாக சாப்பிடுகிறார்களா என்று கவனித்து விட்டு சந்தோஷமாக நீங்கள் தனியாக உட்கார்ந்து சாப்பிடுங்கள் அல்லது வீட்டில் உதவிக்கு கணவன் மற்றும் கொஞ்சம் உதவி செய்யக் கூடிய அளவுக்கு பெரிய பிள்ளைகள் இருந்தால் அவர்களை பரிமாறச் சொல்லி விட்டு நீங்கள் உணவு சாப்பிடுங்கள் .
அந்த காரணத்திற்காக தான் தாய் தன் குழந்தைகளுடன் உட்கார்ந்து சாப்பிடக் கூடாது என்று கூறினோம் . மேலும் மற்றவர்களுக்குப் பரிமாறிக் கொண்டே சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிடும் பொழுது கவனம் தன் உணவை விட்டு விலகி மற்றவர்கள் ஒழுங்காகச் சாப்பிடுகிறார்களா என்பதிலேயே இருப்பதால் நம் உணவு ஒழுங்காக ஜீரணம் ஆவதில்லை. நம்முடைய அணைத்து வீட்டு வேலைகளையும் செய்து நமக்காக மற்றும் நம்மளுடைய நண்மையை மட்டுமே எண்ணிக் கொண்டு இருக்கும் நம் தாய் அவர்களின் உடல் நிலையில் நாமும் கவனும் செலுத்தலாமே ...