உடலுக்கு குளிர்ச்சி தரும் பழங்களில் முக்கியமானது நெல்லிக்காய். உடல் மற்றும் கண்களுக்கும் இது அதிகப்படியான குளிர்ச்சியை கொடுக்கின்றது. நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து மிக அதிகம். ஒரு பெரிய நெல்லிக்காயில் 600 மில்லி கிராம் அளவுக்கு வைட்டமின் சி சத்து இருக்கின்றது. தயிர் சாதம், சாம்பார் சாதம் சாப்பிடும்போது நெல்லிக்கனியை உறுகாய் செய்து சாப்பிடலாம். உடலுக்கு அதிக குளிர்ச்சியை தருவதால் சளி பிரச்சனை ஏற்படுவதாக சிலர் இதனை சாப்பிட தயங்குகிறார்கள். உண்மையில் ஜலதோஷம் வராமல் நெல்லிக்காய் தடுக்கும் ஆற்றல் உடையது. மேலும் வைரஸ் மூலம் வரும் நோய்களை நெல்லிக்காய் தடுக்கும் ஆற்றல் கொண்டது. நெல்லிக்காயை பச்சையாக சாப்பிடும் போதுதான் அதன் முழு சத்துக்களும் உடலுக்கு கிடைக்கும்.
நெல்லிக்காயில் கால்சியம் சத்துக்கள் அதிகம் இருப்பதால் எலும்புகள் வலுவடையும். தினம் ஒரு நல்லிக்காயை சாப்பிடுவதன் மூலம் உடலில் சுரக்கும் அதிகப்படியான சக்கரையை கட்டுக்குள் வைத்திருக்கலாம். உடல் எடை அதிகம் இருப்பவர்கள் காலையில் தினமும் நெல்லிக்காய் சாறுடன், இஞ்சு சாற்றை சேர்த்து அருந்தி வந்தால் உடல் எடை கணிசமாக குறையும். ரத்த சோகையை போக்க நெல்லிக்காய் அருமருந்தாக உள்ளது. கூந்தல் வளர்ச்சிக்கு நெல்லிக்காய் எண்ணெய் உதவியாக இருக்கும். சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் முதலியவற்றை நெல்லிக்காய் உடன் கலந்து துவையல் செய்து சாப்பிட்டால் இரத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் குறையும். இதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுப்பதில் நெல்லிக்காய் முதன்மையான இடத்தில் இருக்கின்றது.