பெண்களுக்கு ஏற்படும் மார்பக கொழுப்பு கட்டி குறித்து ஹோமியோபதி டாக்டர் தீபா அருளாளன் விளக்குகிறார்
இன்று பல லட்சம் பெண்களுக்கு மார்பகத்தில் கட்டி ஏற்படும் பிரச்சனை இருக்கிறது. இது கேன்சரை ஏற்படுத்தும் கட்டி அல்ல. 14 வயது முதல் 50 வயதுக்குள் இருக்கும் பெண்களுக்கு இந்த பிரச்சனை அதிகம் ஏற்படுகிறது. இந்த வகையான கட்டிகள் நகரக்கூடிய தன்மை படைத்தவை. இந்த வகையான கட்டிகள் நிறைய வலியை ஏற்படுத்தும். கேன்சர் கட்டிகளில் மட்டும்தான் வலி இருக்காது. பெரிய நகரங்களில் வசிப்பவர்கள் கூட கட்டி பெரிதாகும் வரை அதைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.
வலி இல்லாததால் அவர்கள் பரிசோதனைக்கு செல்வதில்லை. வலி இல்லாமல் கட்டி இருக்கும்போது தான் நிச்சயமாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இதில் மார்பகங்கள் கனமாக இருப்பது போல் ஒரு உணர்வு ஏற்படும். மாதவிடாய்க்கு முன் அதிகமான வலி ஏற்பட்டு, அதற்குப் பின் வலி குறையும். கடினமான வேலையில் ஈடுபடும்போது வலி ஏற்படும். கணவனோடு உறவில் ஈடுபடும்போது வலி ஏற்படும். மார்பகங்கள் பெரிதாக இருப்பதே இதற்கான முக்கியமான அறிகுறி.
பெண்களுக்கான ஹார்மோன்கள் சமநிலையில் இருக்க வேண்டும். மன அழுத்தம், கடினமான வேலைகள் ஆகியவையும் இந்த கட்டி ஏற்படுவதற்கான காரணங்களாக அமைகின்றன. கஃபைன் அதிகம் இருக்கும் உணவுகளை நாம் உண்ணக்கூடாது. எண்ணெயில் மீண்டும் மீண்டும் வறுக்கப்பட்ட உணவுகளை உண்ணக்கூடாது. எதையாவது நினைத்து எப்போதும் கவலைப்பட்டுக் கொண்டே இருப்பது தவறு.
நல்லெண்ணெய் சேர்த்துக்கொள்வது மிகவும் நன்மை தரும். பழையனவற்றை எப்போதும் நாம் மறக்காமல், புதியவற்றுக்கு அடிமையாகாமல் இருக்கும்போது நோய்கள் நம்மை அண்டாமல் இருக்கும். மார்பகங்களில் மசாஜ் செய்வது நன்மை பயக்காது. மசாஜ் செய்வதால் ரத்த ஓட்டத்தில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், அதனால் மார்பகங்களில் வீக்கம் அதிகமாவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதே உண்மை. எனவே இதுபோன்ற பொய்யான விஷயங்களை, ட்ரெண்ட் ஆவதற்காக சிலர் சொல்லி வருவதை நிறுத்த வேண்டும்.