Skip to main content

சீனாவில் எருது ஆண்டு முடிந்து புலி ஆண்டு தொடங்கியது!

Published on 02/02/2022 | Edited on 02/02/2022

 

The year of the bull in China is over and the year of the tiger has begun!

 

சீனாவில் புத்தாண்டு பிறந்திருப்பதையொட்டி, சீனா மீடியா நிறுவனம் சார்பில் கண்ணை கவரும் கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டனர். 

 

சீனாவில் விலங்குகளில் பெயர்களில் ஆண்டுகளுக்கு பெயரிடப்படுகிறது. அதன்படி எருது ஆண்டு நிறைவடைந்து,  நேற்று (01/02/2022) புலி ஆண்டு தொடங்கியது. இதனையொட்டி, உலகம் முழுவதும் உள்ள சீனர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். சீனாவில் அரசு அலுவலகங்களுக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

 

புத்தாண்டையொட்டி, சீனா மீடியா குழுமம் சார்பில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகள், இந்த ஆண்டும் களைக்கட்டின. விண்வெளியில் சீனாவின் சாதனை, கரோனாவுக்கு எதிரான போர் உள்ளிட்டத் தலைப்புகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளும், ஆடல், பாடல்களும் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தினர். 

 

சீனாவைத் தொடர்ந்து, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் சீனப் புத்தாண்டை மக்கள் உற்சாகமாகக் கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

சார்ந்த செய்திகள்