உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இத்தாலி நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,050 ஆக அதிகரித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,07,627 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளில் மிக முக்கியமான நாடு இத்தாலி. இந்த நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 53,578 ஆக உயர்ந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,825 ஆக அதிகரித்துள்ளது. நேற்று (21/03/2020) மட்டும் இத்தாலியில் சுமார் 793 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உலக நாடுகள் கவலை அடைந்துள்ளனர்.
சீனாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 81,054 ஆக உள்ள நிலையில், 3,261 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் ஈரானில் 20,610 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,556 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் 25,496 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு 1,378 ஆக உயர்ந்துள்ளது.
பிரான்ஸ் நாட்டில் 14,459 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 562 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,687 ஆக உயர்ந்துள்ள நிலையில் உயிரிழப்பு 340 பேர் உயிரிழந்துள்ளனர்.
இங்கிலாந்து நாட்டில் 5,018 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு 233 ஆக அதிகரித்துள்ளது. நெதர்லாந்தில் 3,631 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு 136 ஆக உயர்ந்துள்ளது.
தென்கொரியாவில் கரோனாவுக்கு 8,897 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 104 பேர் உயிரிழந்துள்ளனர். ஜெர்மனியில் 22,364 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு 84 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 332 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக மஹாராஷ்டிரா மாநிலத்தில் 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.