Skip to main content

3000 ஆண்டுகள் பழமையான நகரத்தை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்...

Published on 16/11/2019 | Edited on 16/11/2019

3000 ஆண்டுகள் பழமையான நகரம் ஒன்றை இத்தாலிய- பாகிஸ்தானிய அகழ்வாராய்ச்சியாளர்கள் பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் கண்டறிந்துள்ளனர்.

 

ancient city named as bazeera found in northwest pakistan

 

 

வடமேற்கு பாகிஸ்தானில் 3,000 ஆண்டுகள் பழமையான நகரத்தைக் கண்டறிந்து, அதற்கு பசிரா என்று ஆராய்ச்சியாளர்கள் பெயர் வைத்துள்ளனர். இந்த நகரத்தில் பேரரசர் அலெக்ஸாண்டர் கி.பி. 326 ஆம் ஆண்டு, தனது எதிரிகளுடன் போரிட்டு 'பசிரா' என்ற கோட்டையை உருவாக்கியதாக அங்கு கிடைத்துள்ள ஆதரங்கள் தெரிவிப்பதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். அலெக்ஸாண்டர் வருகைக்கு முன் இந்த நகரத்தில் இந்து ஷாகி மற்றும் புத்த மதத்தினர் வாழ்ந்து வந்ததாக தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த பகுதியில், பண்டைய கால இந்து கோயில்கள், நாணயங்கள், பானைகள், தூண்கள் மற்றும் ஆயுதங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்