உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39,16,210 ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,70,707 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் உலகளவில் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 13,41,235 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் மேலும் 29,531 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு 12,92,623 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் ஸ்பெயினியில் 2,56,855, இத்தாலியில் 2,15,858, பிரிட்டனில் 2,06,715, ரஷ்யாவில் 1,77,160, பிரான்சில் 1,74,791, ஜெர்மனியில் 1,69,430, பிரேசிலில் 1,35,693, துருக்கியில் 1,33,721, ஈரானில் 1,03,135, சீனாவில் 82,886, கனடாவில் 64,922, பாகிஸ்தானில் 24,644, சிங்கப்பூரில் 20,939, மலேசியாவில் 6,467, இலங்கையில் 823, சவுதி அரேபியாவில் 33,731, கத்தாரில் 18,890, ஐக்கிய அரபு அமீரகத்தில் 16,240, பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கரோனாவுக்கு மேலும் 2,129 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 76,908 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினியில் 26,070, இத்தாலியில் 29,958, பிரிட்டனில் 30,615, பிரான்சில் 25,987, ஜெர்மனியில் 7,392, ரஷ்யாவில் 1,625, துருக்கியில் 3,641, பிரேசிலில் 9,188, ஈரானில் 6,486, சீனாவில் 4,633, கனடாவில் 4,408, பாகிஸ்தானில் 585, சிங்கப்பூரில் 20, மலேசியாவில் 107, இலங்கையில் 9, சவுதி அரேபியாவில் 219, கத்தாரில் 12, ஐக்கிய அரபு அமீரகத்தில் 165 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.